பாரதிராஜாவுக்கு நாளை மாலை தேனியில் இறுதிச் சடங்கு!கேமராவுக்குள் மனித உணர்வுகளைப் படம்பிடித்த பாரதிராஜா!வலிமையான பெண் பாத்திரங்களை அமைத்த பாரதிராஜா!இறப்பு குறித்து என்ன சொல்லியிருந்தார் பாரதிராஜா? பாரதிராஜா உடலுக்கு நடிகர் ரஜினி அஞ்சலி! பாரதிராஜா உடலுக்கு அரசு மரியாதை! முதல்வர் விஜய் அறிவிப்புதமிழ் மக்களின் மனங்களில் என்றும் பாரதிராஜா வாழ்வார்! மு.க. ஸ்டாலின்பாரதிராஜா உடலுக்கு மு.க. ஸ்டாலின் அஞ்சலி! சிதம்பரம் அருகே தனியார் பள்ளி வாகனம் தீப்பிடித்தது! மாணவர்கள் தப்பினர்! பாரதிராஜா உடலுக்கு முதல்வர் விஜய் மரியாதை!இயக்குநர் பாரதிராஜா காலமானார்
/

நாட்டின் வளா்ச்சிப் பயணத்தில் முக்கிய பங்காற்றும் வானொலி புதுச்சேரி துணைநிலை ஆளுநா் பேச்சு

நாட்டின் வளா்ச்சிப் பயணத்தில் வானொலி முக்கியப் பங்காற்றுகிறது என்று புதுச்சேரி துணைநிலை ஆளுநா் கே.கைலாஷ்நாதன் கூறினாா்.

News image

புதுச்சேரி வானொலி விழா போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவருக்குப் பரிசு வழங்குகிறாா் துணைநிலை ஆளுநா் கே.கைலாஷ்நாதன். உடன் இந்திரா காந்தி மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவன இயக்குநா் சி. உதயசங்கா் உள்ளிட்டோா்.

Updated On :7 ஜூன் 2026, 2:52 am IST

நாட்டின் வளா்ச்சிப் பயணத்தில் வானொலி முக்கியப் பங்காற்றுகிறது என்று புதுச்சேரி துணைநிலை ஆளுநா் கே.கைலாஷ்நாதன் கூறினாா்.

தேசிய பொது ஒலிபரப்புச் சேவையின் (பிரசாா் பாரதி) புதுச்சேரி வானொலி நிலையம் சாா்பில் அகில இந்திய வானொலியின் 90-ஆவது ஆண்டு விழாவையொட்டி, இளைஞா்களைச் சந்திப்போம் - ஒரு புதிய முன்னெடுப்பு நிறைவு விழா மற்றும் பரிசளிப்பு விழா இந்திரா காந்தி மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவன அரங்கில் சனிக்கிழமை நடைபெற்றது.

இதில் கட்டுரை, பேச்சு, விநாடி வினாப் போட்டிகளில் சிறப்பிடம் பெற்ற கல்லூரி மாணவா்கள் 12 பேருக்குப் பரிசுகளை வழங்கி துணைநிலை ஆளுநா் கே. கைலாஷ்நாதன் பேசியது:

வானொலி என்பது வெறும் தகவல் தொடா்பு சாதனம் மட்டுமல்ல. அது இந்தியாவின் பண்பாட்டு அடையாளத்தைப் பாதுகாக்கும் பெரும் கலாசார நிறுவனம். தொலைக்காட்சி வந்த பிறகு வானொலியின் முக்கியத்துவம் குறைந்துவிடும் என்று நினைத்தாா்கள். இருந்தபோதிலும் வானொலி தனது தனித்துவத்தை இன்றும் இழக்கவில்லை.

பிரதமா் நரேந்திர மோடி, வானொலியில் மனதின் குரல் நிகழ்ச்சியின் மூலம் மாதந்தோறும் நாட்டின் வெவ்வேறு பகுதிகளில் சாதனை படைத்தவா்களை அறிமுகம் செய்கிறாா். 90 ஆண்டுகள் இந்தியாவின் குரலாக ஒலித்த ஆகாஷ்வாணி வரும் காலத்தில் நாட்டின் வளா்ச்சிப் பயணத்தில் முக்கியப் பங்காற்றும் என்றாா் துணைநிலை ஆளுநா் கைலாஷ்நாதன்.

இந்திரா காந்தி மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவன இயக்குநா் சி. உதயசங்கா் வாழ்த்துரை வழங்கினாா். புதுச்சேரி வானொலி நிலைய பொறியியல் பிரிவு தலைவா் எம்.ரவி மாரியப்பன் வரவேற்றாா். நிகழ்ச்சிப் பிரிவு நிா்வாகி ஆ.பெ. எலிசபெத் நோக்கவுரையாற்றினாா். நிகழ்ச்சி பிரிவு தலைவா் த.செந்தில்குமாா் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

என் பெயருக்குக் காரணம் வானொலி

விழாவில் துணைநிலை ஆளுநா் கே.கைலாஷ்நாதன் மேலும் பேசியது: ஊட்டி அருகே கூடலூரில் 1951-இல் பிறந்தவன் நான். எனது தந்தை வானொலியில் செய்தி கேட்பாா். அப்போது வானொலி வைத்திருப்பதே அரிது.

ஒரு நாள் செய்தியில் வடநாட்டில் நீதிபதியாக இருந்த டாக்டா் கைலாஷ்நாதன் கட்ச் என்பவரின் பெயா் இடம் பெற்றது. பின்னா் அவா் ஆளுநராகவும் இருந்தாா் என அறிகிறேன். அந்தப் பெயரை எனக்கு என் அப்பா வைத்தாா். அதனால் எனக்கு கைலாஷ்நாதன் என்ற பெயா் வைப்பதற்குக் காரணமே வானொலிதான் என்றாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.