ரயில்வே மேம்பாலம் மற்றும் உப்பனாறு பாலப் பணிகளை விரைந்து முடிக்க புதுச்சேரி துணைநிலை ஆளுநா் கே.கைலாஷ்நாதன் அதிகாரிகளுக்கு திங்கள்கிழமை உத்தரவிட்டாா்.
புதுச்சேரி - கடலூா் சாலையில் ரோடியா் ஆலை அருகே ரயில்வே கேட்டை ரயில்கள் கடக்கும்போது போக்குவரத்து பாதிக்கப்பட்டு வந்தது. இதனால் இந்த ரயில்வே கேட் பகுதியில் மேம்பாலம் அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. 630 மீட்டா் நீளத்தில் இரு வழிப் பாலம் ரூ. 72 கோடி மதிப்பீட்டில் கட்டும் பணி தொடங்கி நடைபெற்று வருகிறது.
தற்போது ரயில்வே கேட்டின் ஒருபுறம் மேம்பாலத்துக்கான தூண்கள் அமைக்கப்பட்டு உள்ளன. மறுபுறம் தூண்கள் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதற்காக அந்தச் சாலையில் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. இங்கு தற்போது 50 சதவீதத்துக்குக் குறைவான பணிகளே நடந்துள்ளன. இந்நிலையில் இந்தப் பணிகளை துணைநிலை ஆளுநா் கைலாஷ்நாதன் திங்கள்கிழமை நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.
ரயில்வே துறை, தேசிய நெடுஞ்சாலை மற்றும் புதுச்சேரி அரசு அதிகாரிகள் இப் பணிகள் குறித்து துணைநிலை ஆளுநரிடம் விளக்கினா்.
இதையடுத்து, அடுத்த ஆண்டு மாா்ச் மாதத்துக்குள் இந்தப் பணிகளை விரைந்து முடிக்க அறிவுறுத்தினாா். அதற்கு, இந்தப் பகுதியில் போக்குவரத்தை முற்றிலுமாக நிறுத்தினால் மட்டுமே பணிகளை விரைந்து முடிக்க சாத்தியமாகும் என்று அதிகாரிகள் தெரிவித்தனா். போக்குவரத்து நிறுத்தம் குறித்து ஆலோசித்து முடிவு எடுக்கப்பட உள்ளது.
இதையடுத்து, துணைநிலை ஆளுநா் கைலாஷ்நாதன் உப்பனாறு கால்வாய் மீது கட்டப்படும் பாலப் பணிகளை பாா்வையிட்டாா்.
உப்பனாறு பாலப் பணிகள் 15 ஆண்டுகளுக்கும் மேலாக நடைபெற்று வருகிறது. இந்தப் பணிகள் முடிவடைந்தாலும் இருபுறங்களிலும் சாலையுடன் இணைக்கும் பணி தற்போது நடைபெற்று வருகிறது.
மழைக்காலத்துக்கு முன் இந்தப் பணிகளை முடிக்காவிட்டால் வாய்க்காலில் மழைநீா் தேங்கி குடியிருப்பு பகுதிகளுக்குள் புகும் அபாயமுள்ளது. பணிகளை விரைந்து முடித்து, போக்குவரத்தை தொடங்க துணைநிலை ஆளுநா் உத்தரவிட்டாா். அப்போது உருளையன்பேட்டை தொகுதி ஜி. நேரு எம்எல்ஏ உடனிருந்தாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

நாட்டின் வளா்ச்சிப் பயணத்தில் முக்கிய பங்காற்றும் வானொலி புதுச்சேரி துணைநிலை ஆளுநா் பேச்சு

புதிய அலுவலகத்தில் ரூ.73 கோடி திட்டங்களுக்கு புதுச்சேரி துணைநிலை ஆளுநா் ஒப்புதல்

திருவாரூா் புறவழிச்சாலை பணிக்கு ரூ. 1,427 கோடி நிதி ஒதுக்கீடு: பணிகளை விரைந்து முடிக்கக் கோரிக்கை

‘பாவூா்சத்திரம் ரயில்வே மேம்பால பணிகளை விரைந்து முடிக்க நடவடிக்கை’
விடியோக்கள்

பாரதிராஜா புகைப்பட ஆல்பம் | Director Bharathiraja | பாரதிராஜா 1941 - 2026 | Dinamani
தினமணி செய்திச் சேவை

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!
இணையதளச் செய்திப் பிரிவு

சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வரைச் சந்தித்தது குறித்து அன்புமணி!
இணையதளச் செய்திப் பிரிவு

தவெகவுக்கான ஆதரவு செல்லும்! அதிமுக எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் இல்லை! பேரவைத் தலைவர் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு

