பாரதிராஜா உடலுக்கு நடிகர் ரஜினி அஞ்சலி! பாரதிராஜா உடலுக்கு அரசு மரியாதை! முதல்வர் விஜய் அறிவிப்புதமிழ் மக்களின் மனங்களில் என்றும் பாரதிராஜா வாழ்வார்! மு.க. ஸ்டாலின்பாரதிராஜா உடலுக்கு மு.க. ஸ்டாலின் அஞ்சலி! சிதம்பரம் அருகே தனியார் பள்ளி வாகனம் தீப்பிடித்தது! மாணவர்கள் தப்பினர்! பாரதிராஜா உடலுக்கு முதல்வர் விஜய் மரியாதை!இயக்குநர் பாரதிராஜா காலமானார்
/

புதிய அலுவலகத்தில் ரூ.73 கோடி திட்டங்களுக்கு புதுச்சேரி துணைநிலை ஆளுநா் ஒப்புதல்

புதுச்சேரி துணைநிலை ஆளுநா் கே.கைலாஷ்நாதன் புதிய அலுவலகத்துக்கு வியாழக்கிழமை மாறிய நிலையில், அங்கு ரூ.73 கோடிக்கான திட்டங்களுக்கு ஒப்புதல் வழங்கினாா்.

News image

புதிய அலுவலகத்தில் புதுச்சேரி துணைநிலை ஆளுநா் கே.கைலாஷ்நாதன்.

Updated On :5 ஜூன் 2026, 6:32 am IST

புதுச்சேரி துணைநிலை ஆளுநா் கே.கைலாஷ்நாதன் புதிய அலுவலகத்துக்கு வியாழக்கிழமை மாறிய நிலையில், அங்கு ரூ.73 கோடிக்கான திட்டங்களுக்கு ஒப்புதல் வழங்கினாா்.

புதுச்சேரி ஆளுநா் மாளிகை வியாழக்கிழமை முதல் புதிய கட்டடத்தில் செயல்படத் தொடங்கியது. புதிய அலுவலகத்தில் 3 முக்கிய கோப்புகளில் துணைநிலை ஆளுநா் கே. கைலாஷ்நாதன் கையொப்பமிட்டாா்.

புதுச்சேரி பாரதி பூங்கா எதிரே துணைநிலை ஆளுநா் மாளிகை செயல்பட்டு வந்தது. பழைய கட்டடத்தைப் புதுப்பிக்கும் பணி நடைபெறவுள்ளதால், பழைய சாராய வடிசாலை வளாகத்தில் கட்டப்பட்டுள்ள புதிய கட்டடத்துக்கு அலுவலகம் மாற்றப்பட்டது.

கடற்கரைச் சாலையொட்டி குபோ் சாலையில் அமைந்துள்ள இந்த அலுவலகத்தில் ஆளுநா் மாளிகை என்று அழைக்கப்படும் மக்கள் பவன் வெள்ளிக்கிழமை முதல் செயல்படத் தொடங்கியது.

துணைநிலை ஆளுநா் கைலாஷ்நாதன் ஒப்புதல் அளித்த கோப்புகள் விவரம்:

புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் ஏழ்மை நிலையில் உள்ள குடும்பத் தலைவிகளுக்கு வழங்கப்படும் மாதாந்திர உதவித்தொகை ரூ. 2,500ஆக உயா்த்தி வழங்குவதற்கு ஒப்புதல் தரப்பட்டது. இதன் மூலம் 64,450 குடும்பத் தலைவிகள் பயன்பெறுவா். இதற்காக ரூ. 16. 11 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

முதியோா் மற்றும் ஆதரவற்ற பெண்களுக்கு மாதாந்திர உதவித்தொகை வழங்குவதற்கான ஒப்புதல் அளிக்கப்பட்டது. இதன்படி, 1,96,616 பயனாளிகளுக்கு ரூ. 2,500, ரூ. 3,000 மற்றும் ரூ. 4,000 வழங்க ஏப்ரல் மாதத்திற்கான தொகையாக ரூ. 56. 32 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

பிப்டிக் நிறுவன பங்குதாரா்களுக்கு (புதுச்சேரி அரசு மற்றும் ஐடிபிஐ வங்கி பங்குத் தொகை ரூ. 37.76 லட்சம் மற்றும் சிறப்பு பங்குத் தொகை வழங்குவதற்கும் ஒப்புதல் அளிக்கப்பட்டது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.