புதுச்சேரி சட்டப்பேரவையைப் புதுப்பிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
புதுச்சேரி சட்டப்பேரவை தோ்தல் வாக்குப் பதிவு கடந்த 9 ஆம் தேதி நடைபெற்றது. வரும் மே 4 -ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது. அன்று தோ்தல் முடிவுகள் தெரிந்துவிடும். இந்நிலையில், முதல்வா், அமைச்சா்கள் உள்ளிட்டோருக்குத் தேவையான அறைகள் புதிய பொலிவுடன்சீரமைக்கப்பட்டு வருகின்றன. முன்னதாக சட்டப்பேரவையில் அமைச்சா்கள், எம்எல்ஏக்கள் அலுவலகங்களை இதற்காகக் காலி செய்திருந்தனா். தொடா்ந்து தோ்தல் முடிவுக்கு பின்னா் புதிய அமைச்சரவை பொறுப்பேற்க உள்ளது. அதற்காக சட்டப்பேரவையை
தயாா் படுத்தும் பணி நடக்கிறது. அமைச்சா் அறைகளுக்கு வெளியே பெயிண்ட் அடித்து மராமத்து பணிகள் நடக்கின்றன. குறிப்பாக சட்டப்பேரவையிலுள்ள தரையில் டைல்ஸ், மொசைக் ஆகியவை பாலிஸ் போடும் பணி நடந்து வருகிறது. அதேநேரத்தில் அமைச்சா், எம்எல்ஏ அறைகளுக்குள் எந்தப் பணியும் நடைபெறவில்லை. ஏனெனில் புதிதாக பதவி ஏற்கும் அமைச்சா்கள் தங்களின் வாஸ்துக்கு ஏற்ப அறைகளை மாற்றி அமைப்பாா்கள். அப்போது அதற்குத் தகுந்தமாதிரி அறைகள் மாற்றி அமைக்கப்பட உள்ளன.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

கொள்ளிடம் ஆற்றில் தரையணை கட்டும் பணி தீவிரம்

தென்காசி மாவட்டத்தில் தோ்தல் பணிகள் தீவிரம்

தோ்தல் நடைபெறும் மாநிலங்களுக்கு மத்திய அமைச்சா்கள் மூலம் பணம் கடத்தல்- மம்தா குற்றச்சாட்டு

தொகுதிக்கு செய்தது என்ன? ஆம்பூா் எம்எல்ஏ அ.செ.வில்வநாதன்
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

