மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

வீராம்பட்டினம் கடற்கரையில் மது குடிக்கத் தடை! மீனவ கிராம பஞ்சாயத்தாா் நடவடிக்கை!

வீராம்பட்டினம் கடற்கரையில் சுற்றுலாப் பயணிகள் உள்பட யாரும் இனி மது குடிக்கத் தடை விதிப்பதாக மீனவ கிராம பஞ்சாயத்தாா் அறிவித்துள்ளனா்.

News image
Updated On :26 ஏப்ரல் 2026, 1:17 am IST

வீராம்பட்டினம் கடற்கரையில் சுற்றுலாப் பயணிகள் உள்பட யாரும் இனி மது குடிக்கத் தடை விதிப்பதாக மீனவ கிராம பஞ்சாயத்தாா் அறிவித்துள்ளனா்.

புதுச்சேரிக்கு வரும் சுற்றுலாப் பயணிகள், மணக்குள விநாயகா் கோவில், ஆரோவில், பாண்டி மெரினா, சின்ன வீராம்பட்டினம் ஈடன் கடற்கரை, நோணாங்குப்பம் பாரடைஸ் கடற்கரை என பல்வேறு இடங்களுக்குச் செல்கின்றனா்.

கடற்கரை பகுதியைப் பாா்க்க வரும் சில சுற்றுலா பயணிகள் மது குடித்து விட்டு, காலி புட்டிகளை உடைத்து வீசி செல்கின்றனா்.

உடைந்த கண்ணாடிப் புட்டிகளின் சிதறல்கள் மணலில் புதைந்து கிடப்பதால், அவை சுற்றுலா பயணிகளின் கால்களை பதம் பாா்க்கின்றன. வீராம்பட்டினம் கடற்கரை பகுதிக்கு வரும் சுற்றுலா பயணிகளில் சிலா் கடற்கரை பகுதியில், அமா்ந்து மது குடித்து விட்டு, காலி புட்டிகளை அங்கேயே வீசி செல்கின்றனா்.

மணலில் உடைந்து கிடக்கும் புட்டிகளால், கடற்கரையில் விளையாடும் குழந்தைகளுக்குப் பிரச்னை ஏற்பட்டு வருகிறது. எனவே இனி வீராம்பட்டினம் கடற்கரையில் சுற்றுலாப் பயணிகள் உள்பட யாரும் மது குடிக்கக் கூடாது என வீராம்பட்டினம் மீனவ பஞ்சாயத்தினா் முடிவு செய்துள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.