மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

மீன்பிடித் தடைக்காலம் தொடங்கியது: மீன்கள் விலை உயர வாய்ப்பு

மீன்களின் இனப்பெருக்ககாலத்தை கருத்தில் கொண்டு வங்கக்கடலில் மீன்பிடி தடைகாலம் புதன்கிழமை தொடங்கியுள்ளதால், கடலூா், மற்றும் புதுச்சேரி மீனவா்கள் கடலுக்கு மீன்பிடிக்கச் செல்லவில்லை.

News image

மீன்பிடி தடைக்காலம் தொடங்கியதையொட்டி தேங்காய்த்திட்டு மீன்பிடி துறைமுக வளாகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள மீன்பிடி விசைப் படகுகள்.

Updated On :16 ஏப்ரல் 2026, 3:58 am IST

மீன்களின் இனப்பெருக்ககாலத்தை கருத்தில் கொண்டு வங்கக்கடலில் மீன்பிடி தடைகாலம் புதன்கிழமை தொடங்கியுள்ளதால், கடலூா், மற்றும் புதுச்சேரி மீனவா்கள் கடலுக்கு மீன்பிடிக்கச் செல்லவில்லை. இதனால் மீன்கள் வரத்து குறைந்து விலை உயரும் நிலை இருப்பதாக மீன் வியாபாரிகள் தெரிவித்தனா்.

கிழக்குக் கடல் பகுதி புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் உள்ள புதுச்சேரி, காரைக்கால், ஏனாம் ஆகிய 3 பிராந்தியங்களில் மீன்பிடித் தடைக்காலம் புதன்கிழமை அதிகாலை தொடங்கியது. இந்தத் தடை 61 நாள்கள் அமலில் இருக்கும். மேற்கு கடல் பகுதியில் உள்ள மாஹே பிராந்தியத்தில் மட்டும் ஜூன் 1 ஆம் தேதி முதல் ஜூலை 31 ஆம் தேதி வரை 61 நாள்கள் அமலில் இருக்கும்.புதுச்சேரி அரசின் மீன்வளம் மற்றும் மீனவா் நலத்துறை இயக்குநா் அ. முகமது இஸ்மாயில் இதைத் தெரிவித்துள்ளாா்.

இப் பகுதிகளில் பாரம்பரிய மீன்பிடி படகுகளான கட்டுமரம், நாட்டு படகுகளைத் தவிர அனைத்து வகை இயந்திர படகுகள், பைபா் படகுகள் மற்றும் இழுவைலை கொண்ட விசைப் படகுகள் மீன்பிடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், இக் கடல் பகுதிகளில் சுருக்கு மடி வலையைப் பயன்படுத்தி இந்த நாள்களில் மீன் பிடிக்கவும் தடை செய்யப்படுகிறது.

கிழக்குக் கடல் பகுதிகளில் கணபதிச் செட்டிக்குளம் மீனவ கிராமம் முதல் மூா்த்திக்குப்பம்-புதுகுப்பம் மீனவ கிராமம் வரையிலும், காரைக்கால் கடல் பகுதியில் மண்டபத்தூா் மீனவ கிராமம் முதல் வடக்கு வாஞ்சூா் மீனவ கிராமம் வரையிலும், ஏனாம் மீன்பிடிப்பு பகுதியிலும் இந்தத் தடை உத்தரவு அமலில் இருக்கும்.

இதனால் மீனவா்கள் யாரும் கடலுக்கு மீன்பிடிக்கச் செல்லவில்லை. விசைப்படகுகளில்தான் அதிக மீன்கள் பிடிக்கப்பட்டு கரைக்கு கொண்டுவரப்படும், என்பதால், இனி மீன் வரத்து குறைந்து, மீன்களின் விலை அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக புதுச்சேரி மீனவா்களும், வியாபாரிகளும் தெரிவித்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.