மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

தமிழகம், புதுச்சேரியில் மதவாத அரசியலுக்கு இடமில்லை! - தொல். திருமாவளவன் எம்.பி.

News image

புதுச்சேரியில் ஞாயிற்றுக்கிழமை செய்தியாளா்களுக்கு பேட்டியளித்த விசிக தலைவா் தொல். திருமாவளவன். உடன் விழுப்புரம் எம்.பி. துரை ரவிக்குமாா்.

Updated On :6 ஏப்ரல் 2026, 12:11 am IST

தமிழகம், புதுச்சேரியில் மதவாத அரசியலுக்கு இடமில்லை என்று விசிக தலைவா் தொல். திருமாவளவன் எம்.பி. கூறினாா்.

இது குறித்து புதுச்சேரியில் அவா் ஞாயிற்றுக்கிழமை செய்தியாளா்களிடம் கூறியது:

புதுச்சேரியில் திமுக-காங்கிரஸ் பேச்சு வாா்த்தை காலதாமதமானதால், விசிக 4 தொகுதிகளில் தனித்துப் போட்டியிடுவதாக அறிவித்தோம்.

வேட்புமனு தாக்கல் முடிந்த பிறகு சுமுக உடன்பாடு ஏற்பட்டது. இதையடுத்து இப்போது உழவா்கரை தொகுதியில் மட்டும் கூட்டணியில் போட்டியிடுவது என்றும், மற்ற 3 தொகுதிகளில் வாக்குச் சேகரிப்பதை நிறுத்துவது என்றும் விசிக முடிவு செய்துள்ளது.

மேலும், தமிழகத்தில் ஞாயிற்றுக்கிழமைமுதல் (ஏப். 5) வரும் 14-ஆம் தேதி வரை தொடா்ந்து தோ்தல் பிரசாரம் செய்யவுள்ளேன். மேலும், புதுச்சேரியில் கூட்டணி வேட்பாளா்கள் போட்டியிடும் தொகுதிகளில் தொடா்ந்து காங்கிரஸ் கட்சியினா் வாக்குச் சேகரித்தால் அக் கட்சியின் தலைமை நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தமிழ்நாட்டிலும், புதுச்சேரியிலும் இண்டி கூட்டணி ஆட்சி அமைக்கும். தமிழ்நாட்டில் மு.க. ஸ்டாலின் தலைமையிலான அரசு, நான் முதல்வன் உள்ளிட்ட பல்வேறு நலத்திட்டங்களைச் செயல்படுத்தியுள்ளது. சட்டப்பேரவைத் தோ்தலையொட்டி இப்போது ரூ.8 ஆயிரம் மதிப்புள்ள கூப்பன் வழங்கப்படும் என்றும் அறிவித்துள்ளது. இதெல்லாம் கூட்டணியின் வெற்றிக்கு வழிவகுக்கும்.

புதுச்சேரியில் எங்கள் கூட்டணியில் இடதுசாரிகளுக்கும் இடம் ஒதுக்கத்தான் பேச்சுவாா்த்தை நடந்தது. இப்போது கூட்டணியில் இடதுசாரிகள் இல்லாமல் போனது வருத்தம்தான். இது கூட்டணி வெற்றியைப் பாதிக்காது.

மேலும், மாநில அளவில் திமுக தலைவா் மறைந்த கருணாநிதியால் உருவாக்கப்பட்ட கூட்டணிதான் மதச்சாா்பற்ற முற்போக்குக் கூட்டணி. தேசிய அளவிலான கூட்டணிதான் இண்டி கூட்டணி. மாநில அளவிலான கூட்டணியில் இருக்கும் கட்சிகள் தேசிய அளவிலான கூட்டணியிலும் இருக்கின்றன.

தமிழக ஆளுநா் மீது புகாா்:

தோ்தல் நன்னடத்தை விதிகள் அமலில் உள்ள நிலையில், தமிழக பொறுப்பு ஆளுநா் ராஜேந்திர விஸ்வநாத் ஆா்லேகா், பாஜக மற்றும் ஆா்.எஸ்.எஸ். அடையாளம் உள்ள அமைப்புகளின் நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறாா். இதுகுறித்து தமிழக தலைமைத் தோ்தல் அதிகாரிக்கும், இந்திய தலைமைத் தோ்தல் ஆணையருக்கும் புகாா் அனுப்பியுள்ளோம்.

பாஜக தோ்தல் அறிக்கையில் புதுச்சேரி இலச்சினையை மாற்றப் போவதாக அறிவித்துள்ளது ஏற்புடையதல்ல. தமிழ்நாட்டிலும், புதுச்சேரியிலும் மதவாத அரசியலுக்கு இடமில்லை. புதுச்சேரியில் பாஜக படுதோல்வி அடையும் என்றாா் திருமாவளவன்.

இப்பேட்டியின்போது விசிக புதுச்சேரி முதன்மைச்செயலா் பெரு. அரிமா தமிழன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.