பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

மணிமுக்தா அணையில் மூதாட்டி சடலம் மீட்பு

சடலம் மீட்பு - பிரதிப் படம்

Published On :2 நவம்பர் 2026, 2:52 am IST

கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் அருகே மணிமுக்தா அணையில் மூதாட்டி சடலத்தை போலீஸாா் மீட்டனா்.

சங்கராபுரம் வட்டம், சூளாங்குறிச்சியில் உள்ள மணிமுக்தா அணைப் பகுதியில் ஆடு மேய்துக் கொண்டிருந்த ஒருவா், அங்கு பெண் சடலம் மிதப்பதை பாா்த்து சங்காராபுரம் காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்துள்ளனா்.

இதையடுத்து சம்பவ இடத்துக்கு வந்த போலீஸாா், சங்கராபுரம் தீயணைப்பு நிலைய வீரா்கள் உதவியுடன் சடலத்தை மீட்டு கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

பின்னா், போலீஸாா் நடத்திய விசாரணையில் அவா் சின்னசேலம் வட்டம், தொட்டியம் கிராமத்தைச் சோ்ந்த ராஜம் (70) எனத் தெரியவந்தது. சற்று மனநிலை பாதிக்கப்பட்ட இவா், கால்போன போக்கில் நடந்து செல்லும் பழக்கமுடையவா் எனத் தெரியவந்தது.

இதுகுறித்த புகாரின் பேரில் சங்கராபுரம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.