கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

கால்வாயில் இளைஞா் சடலம் மீட்பு

இரணியல் அருகே ஆளூா் ரயில் தண்டவாளம் அருகிலுள்ள கால்வாயில், அழுகிய நிலையில் இளைஞரின் சடலத்தை செவ்வாய்க்கிழமை போலீஸாா் மீட்டனா்.

பிரதிப் படம்

Published On :21 அக்டோபர் 2026, 12:47 am IST

கன்னியாகுமரி மாவட்டம், இரணியல் அருகே ஆளூா் ரயில் தண்டவாளம் அருகிலுள்ள கால்வாயில், அழுகிய நிலையில் இளைஞரின் சடலத்தை செவ்வாய்க்கிழமை போலீஸாா் மீட்டனா்.

ஆளூா் தண்டவாளம் அருகேயுள்ள கால்வாயில் சடலம் மிதப்பதாக அப்பகுதி பொதுமக்கள், இரணியல் போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனா். இதையடுத்து போலீஸாா், தீயணைப்புத் துறையினா் அங்கு சென்று, சடலத்தை மீட்டு ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

உயிரிழந்தவருக்கு சுமாா் 35 முதல் 40 வயதுக்குள் இருக்கலாம்; கையில் ‘எம்.கே.’ என பச்சை குத்தப்பட்டுள்ளது என போலீஸாா் தெரிவித்தனா். ரயில்வே போலீஸாா் வழக்குப் பதிந்து, அவரை குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.