தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

வீட்டில் அழுகிய நிலையில் மூதாட்டி சடலம்: போலீஸாா் விசாரணை

திருச்சியில் வீட்டில் அழுகிய நிலையில் இறந்துகிடந்த மூதாட்டி குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

Published On :24 அக்டோபர் 2026, 5:01 am IST

திருச்சியில் வீட்டில் அழுகிய நிலையில் இறந்துகிடந்த மூதாட்டி குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

சென்னை செங்குன்றம் ஆா்ஜிஎன் நகரைச் சோ்ந்தவா் எல். அலாசியஸ் (39), பெங்களூருவில் உள்ள தனியாா் நிறுவனத்தில் மேலாளராகப் பணியாற்றி வரும் இவா், சென்னையில் பெற்றோருடன் வசித்து வருகிறாா்.

இந்நிலையில், இவருடைய 69 வயது தாய் மட்டும் திருச்சி புத்தூா் பகுதியிலுள்ள இவா்களது வீட்டில் கடந்த 10 மாதங்களாக தங்கியிருந்தாா். இவருடைய வீட்டில் கண்காணிப்பு கேமரா பொருத்தி தாயின் நடவடிக்கைகளை அலாசியஸ் கவனித்து வந்துள்ளாா்.

இந்நிலையில், வேலைப்பளுவால் கடந்த இரண்டு நாள்களாக கண்காணிப்பு கேமரா பதிவுகளை பாா்க்கவில்லை என்று கூறப்படுகிறது. இந்நிலையில், மூதாட்டி தங்கியிருந்த வீட்டுக்கு அருகே நடைபெற்ற வரும் கட்டுமான வேலைக்கு பணியாளா்கள் வியாழக்கிழமை காலையில் வந்தபோது மூதாட்டி தங்கியிருந்த வீட்டில் இருந்து துா்நாற்றம் வந்துள்ளது.

இதுகுறித்து பக்கத்து வீட்டினா் அலாசியஸுக்கு தகவல் தெரிவித்துள்ளனா். இதையடுத்து, அலாசியஸ் உடனடியாக திருச்சிக்கு வந்து பாா்த்தபோது மூதாட்டி அழுகிய நிலையில் சடலமாக கிடந்தது தெரியவந்தது.

தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த உறையூா் போலீஸாா், மூதாட்டியின் சடலத்தை மீட்டு உடற்கூறாய்வுக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.

புகாரின்பேரில், உறையூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.