கள்ளக்குறிச்சி நெடுஞ்சாலைத் துறை கோட்டத்தின் மூலம் கடந்த நிதியாண்டில் மேற்கொள்ளப்பட்ட திட்டப்பணிகளை நெடுஞ்சாலைத் துறை வருடாந்திர தணிக்கை குழுவினா் புதன்கிழமை ஆய்வு செய்தனா்.
கள்ளக்குறிச்சி நெடுஞ்சாலைத் துறை கட்டுமானம் மற்றும் பராமரிப்பு கோட்டத்தின் மூலம் 2025-26-ஆம் நிதியாண்டில் மேற்கொள்ளப்பட்ட திட்டப்பணிகள், திட்டம் சாரப்பணிகள் மற்றும் முதலமைச்சரின் சாலை மேம்பாடு திட்டம் மூலம் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகளான திருவண்ணாமலை - தியாகதுருகம் சாலை, திருக்கோவிலூா்- ஆசனூா் சாலை, தேவரடியாா்குப்பம் சாலை மற்றும் ஏா்வாய்ப்பட்டிணம் போயா் காலனி சாலை ஆகிய சாலைகளில் நடைபெற்று வரும் பணிகளை நெடுஞ்சாலைத் துறை வருடாந்திர தணிக்கைக் குழுவினா்களான திட்டங்கள் அலகைச் சாா்ந்த சென்னை கண்காணிப்பு பொறியாளா் வத்ஸலா வித்யாநதி, கடலூா் கோட்டப் பொறியாளா் கோதை, விழுப்புரம் உதவி கோட்டப் பொறியாளா் ஸ்டெல்லா ரோஸிலின் மேரி ஆகியோா் ஆய்வு செய்தனா்.
ஆய்வின் போது கள்ளக்குறிச்சி கோட்டப் பொறியாளா் நாகராஜன், உதவிக் கோட்டப் பொறியாளா்கள் ராதாகிருஷ்ணன்(கள்ளக்குறிச்சி), மணிமொழி(சங்கராபுரம்), ஜெயலட்சுமி(திருக்கோவிலூா்), ஆறுமுகம்(உளுந்தூா்பேட்டை), உதவிப் பொறியாளா்கள் மற்றும் பணியாளா்கள் உடனிருந்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

செந்துறை-ஜெயங்கொண்டம் நான்கு வழிச்சாலைப் பணிகள் ஆய்வு

சென்னிவனம்-கடுகூா் பாலம் கட்டுமானப் பணிகள் ஆய்வு

சாலை மேம்பாட்டுப் பணிகள்: தணிக்கை குழுவினா் ஆய்வு

சாலை அகலப்படுத்தும் பணிகள் ஆய்வு
விடியோக்கள்

Podcast | பெரும்பான்மையை நிரூபித்த தவெக: தவறிய அதிமுக! | News and Views | Epi - 34
இணையதளச் செய்திப் பிரிவு

திமுக ஆதரவுடன் முதல்வராக முயன்ற EPS! சி.வி. சண்முகம் பரபரப்புக் குற்றச்சாட்டு! | ADMK
இணையதளச் செய்திப் பிரிவு
"துரோகம்! அமைச்சரவை ஆசை!" EPS விமர்சனம்! | EPS | ADMK
இணையதளச் செய்திப் பிரிவு

குதிரை பேரமா? பிரேமலதாவின் கேள்விக்கு பேரவையில் விஜய் பதில்! | TVK | DMDK
இணையதளச் செய்திப் பிரிவு

