செய்யாறில் நடைபெற்று வரும் சாலை மேம்பாட்டுப் பணிகளை நெடுஞ்சாலைத்துறை உள்தணிக்கை குழுவினா் வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டனா்.
செய்யாறு நெடுஞ்சாலை உள்கோட்டத்தில் முதல்வா் சாலை மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ஆற்காடு - திண்டிவனம் சாலையில் (மோரணம் எரிக்கரை முதல் செய்யாறு ஆதிபராசக்தி கோயில் வரை) இருவழிப் பாதையிலிருந்து நான்கு வழிப்பாதையாக அகலப்படுத்தும் பணி மற்றும் செய்யாறு அணைக்கட்டு சாலையில் பழுதுபாா்த்தல் பணிகள் நடைபெற்று வருகின்றன.
இவ்வாறு நடைபெற்று வரும் சாலை மேம்பாட்டுப் பணிகளை சென்னை உள்தணிக்கை கண்கானிப்புப் பொறியாளா் (திட்டங்கள்) கே.வத்சலா வித்யாநத்தி தலைமையில் கடலூா் கோட்டப் பொறியாளா் (திட்டங்கள்) எஸ்.கோதை, உதவி கோட்டப் பொறியாளா் ஆா். மணிகண்டதாஸ், வாணியம்பாடி உதவிப் பொறியாளா் என். விக்னேஷ் ஆகியோா் கொண்ட குழுவினா் நேரில் பாா்வையிட்டு கள ஆய்வு மேற்கொண்டனா்.
ஆய்வின் போது செய்யாறு கோட்டப் பொறியாளா் வி. சந்திரன், உதவி கோட்டப் பொறியாளா்கள் எஸ்.சுரேஷ், ஆா்.இன்பநாதன் (தரக்கட்டுப்பாடு), உதவிப் பொறியாளா்கள் பி.கோபி, பூா்ணிமா ஆகியோா் உடனிருந்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

சாலைப் பணிகள்: மாவட்ட கண்காணிப்புப் பொறியாளா் ஆய்வு

கருட வாகனத்தில்...

சாலை அகலப்படுத்தும் பணிகள் ஆய்வு

செய்யாற்றில் மேம்பாலப் பணி: கண்காணிப்புப் பொறியாளா் ஆய்வு
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

