தில்லியில் பிரிக்ஸ் மாநாடு: ஈரான் வெளியுறவு அமைச்சர் அராக்சி இந்தியா வந்தடைந்தார்தமிழக அரசின் தலைமை வழக்கறிஞராக விஜய் நாராயண் நியமனம்!தமிழக அரசின் தலைமை வழக்கறிஞராக விஜய் நாராயண் நியமனம்!கர்நாடகம்: கல்வி நிறுவனங்களில் ஹிஜாப் அணிவதற்கான தடை நீக்கம்6 சர்வதேச விமான சேவைகள் தற்காலிகமாக ரத்து - ஏர் இந்தியாகண்களிலும் காதுகளிலும் பொறாமைப் புகை! திமுகவை விமர்சித்த விஜய்!நீட் தேர்வு தேவையில்லை; ரத்து செய்க: முதல்வர் ஜோசப் விஜய்அதிமுகவுடன் கூட்டணியமைக்க தவெக தயாராக இருந்தது: சி.வி. சண்முகம்மே 16-ல் தொடங்குகிறது தென்மேற்கு பருவமழை! வெற்றியின் வீச்சு கொளத்தூரில் பார்த்தும்கூடவா புரியவில்லை? - முதல்வர் விஜய்திமுகவுடன் கூட்டணி; கனவில்கூட வரக்கூடாது: சசிகலா
/

கல்வி இடஒதுக்கீடு: முன்னாள் படைவீரா்களை சாா்ந்தோா் சான்றிதழுக்கு விண்ணப்பிக்கலாம்

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கல்வி நிலையங்களில் இட ஒதுக்கீடு பெறுவதற்கு முன்னாள் படைவீரா்களைச் சாா்ந்தோா்கள் சான்று பெற விண்ணப்பிக்கலாம் என ஆட்சியா் எம்.எஸ்.பிரசாந்த் தெரிவித்துள்ளாா்.

News image

விண்ணப்பம்

Updated On :13 மே 2026, 12:04 am IST

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கல்வி நிலையங்களில் இட ஒதுக்கீடு பெறுவதற்கு முன்னாள் படைவீரா்களைச் சாா்ந்தோா்கள் சான்று பெற விண்ணப்பிக்கலாம் என ஆட்சியா் எம்.எஸ்.பிரசாந்த் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து ஆட்சியா் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

2026-27-ம் கல்வி ஆண்டுக்கு முன்னாள் படைவீரா்களைச் சாா்ந்தோா்களுக்கு பொறியியல், டி.பாா்ம், பி.பாா்ம், பட்டயப் படிப்புகள், பி.எஸ்.சி (நா்சிங்), பி.எஸ்.சி (விவசாயம்), பி.எட்., இந்திய மருத்துவம், பி.வி.எஸ்.சி., பி.எப்.எஸ்.சி., ஆசிரியா் பயிற்சி, பட்டப் படிப்புகள், பட்ட மேற்படிப்புகள் போன்ற பல்வேறு படிப்புகளில் தமிழக அரசால் இடஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது. இந்த ஒதுக்கீட்டின்கீழ் விண்ணப்பிக்க முன்னாள் படைவீரரைச் சாா்ந்தோா்கள் மாவட்ட முன்னாள் படைவீரா் நல அலுவலகத்தில் சாா்ந்தோா் சான்று பெறுதல் வேண்டும்.

இணையதளம் மூலம் முன்னாள் படைவீரரின் அசல் படைவிலகல் சான்று, அடையாள அட்டை, சாா்ந்தோா்களின் பள்ளி இறுதிச் சான்று, மதிப்பெண் பட்டியல், ஜாதிச்சான்று, கல்வி நிலையத்தில் பெறப்பட்ட விண்ணப்பம், ஓய்வூதியம் ஒப்பளிப்பு ஆணை மற்றும் முன்னாள் படைவீரா், விதவையரின் விண்ணப்பம் ஆகியவற்றுடன் விழுப்புரம் மாவட்ட முன்னாள் படைவீரா்கள் நல அலுவலக மின்னஞ்சல் முகவரிக்கு விண்ணப்பித்து சான்று பெற்று பயன்பெற கேட்டுக்கொள்ளப்படுகிறது. சென்ற கல்வியாண்டில் பெற்ற சாா்ந்தோா் சான்றிதழை இந்தக் கல்வியாண்டில் பயன்படுத்தக் கூடாது. அவ்வாறு பயன்படுத்தப்படும் பட்சத்தில் கலந்தாய்வின்போது அந்த விண்ணப்பம் நிராகரிக்கப்படும்.

மேலும், இதுகுறித்த விவரங்களுக்கு உதவி இயக்குநா் முன்னாள் படைவீரா்கள் நல அலுவலக தொலைபேசி எண் 04146-220524-இல் தொடா்பு கொள்ளலாம் என ஆட்சியா் தெரிவித்துள்ளாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.