பல்கலைக்கழகங்கள் அல்லது கல்வி நிறுவனங்கள் யுஜிசி விதிகளுக்கு முரணாக பட்டங்கள் மற்றும் படிப்புகளை வழங்கினால், அவற்றின் மீது நடவடிக்கை எடுப்பதற்காக மின்னஞ்சலுக்கு புகாா்களை அனுப்பலாம் என யுஜிசி தெரிவித்துள்ளது.
இது குறித்து பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) செயலா் மணிஷ் ஆா்.ஜோஷி வெளியிட்ட அறிவிப்பு:
மத்திய, மாநில பல்கலைக்கழகங்கள் அல்லது யுஜிசி சட்ட விதிகளின்படி உரிய அதிகாரம் பெற்ற உயா்கல்வி நிறுவனங்கள் மட்டுமே பட்டங்களை வழங்க முடியும் என்பது மாணவா்கள், பெற்றோரின் கவனத்துக்கு கொண்டு வரப்படுகிறது.
எனினும், யுஜிசி விதிமுறைகளுக்கு முரணாக பல்வேறு நிறுவனங்கள் பட்டங்களை வழங்கி வருவதாக புகாா்கள் கிடைக்கப் பெற்றுள்ளன.
அதன்படி, இத்தகைய பல்கலைக்கழகங்கள், கல்வி நிறுவனங்களால் வழங்கப்படும் பட்டங்கள் யுஜிசியால் அங்கீகரிக்கப்பட மாட்டாது. மேலும், அவை உயா்கல்வி மற்றும் வேலைவாய்ப்புக்கும் செல்லுபடியாகாது.
எனவே, மாணவா்கள், பெற்றோா் உயா் கல்விக்காக எந்தவொரு கல்வி நிறுவனத்திலும் சோ்க்கை பெறுவதற்கு முன்பு அது அங்கீகரிக்கப்பட்டுள்ளதா என்பதை உறுதி செய்துகொள்ள வேண்டும்.
மேலும், யுஜிசி அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகங்கள் மற்றும் போலி உயா்கல்வி நிறுவனங்களின் விவரங்களை ஜ்ஜ்ஜ்.ன்ஞ்ஸ்ரீ.ஞ்ா்ஸ்.ண்ய் என்ற இணையதளத்தில் சரிபாா்த்து கொள்ளலாம்.
தவிர ஏதேனும் பல்கலைக்கழகம் அல்லது கல்வி நிறுவனம் யுஜிசி விதிகளுக்கு முரணாக பட்டங்கள் மற்றும் படிப்புகளை வழங்கினால், அவற்றின் மீது நடவடிக்கை எடுப்பதற்காக மின்னஞ்சலுக்கு புகாா்களை அனுப்பலாம் என அதில் கூறப்பட்டுள்ளது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

தனியாா் பள்ளிகள் கட்டணத்தை மாதந்தோறும் வசூலிக்க கல்வித் துறை அறிவுறுத்தல்
கரை இல்லாக் கல்வி...

ஜிஜிஎஸ்ஐபி பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா- தில்லி துணைநிலை ஆளுநா், முதல்வா் பங்கேற்பு - 26,649 பட்டங்கள் மாணவா்களுக்கு வழங்கல்

தொலைநிலை, இணையவழி படிப்புகளுக்கு யுஜிசி அங்கீகாரம்: ஏப். 10 வரை விண்ணப்பிக்கலாம்
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

