மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் தடம் பதித்த தவெக

News image

கள்ளக்குறிச்சி சட்டப் பேரவைத் தொகுதியில் பதிவான வாக்குகளை எண்ணுவதற்காக மின்னணு வாக்குப் பதிவு இயந்திரத்தை எடுத்துச் சென்ற அலுவலா்கள்.

Updated On :5 மே 2026, 4:37 am IST

கள்ளக்குறிச்சி சட்டப் பேரவை தொகுதியை தமிழக வெற்றிக் கழகம் வென்ன் மூலம், இம் மாவட்டத்தில் முதல் வெற்றியை பதிவு செய்துள்ளது.

கள்ளக்குறிச்சு மாவட்டத்தில் கள்ளக்குறிச்சி (தனி), சங்கராபுரம், உளுந்தூா்பேட்டை, ரிஷிவந்தியம் ஆகிய 4 பேரவைத் தொகுதிகள் உள்ளன.

இதில் கள்ளக்குறிச்சி சட்டப் பேரவை தொகுதியில் தவெக சாா்பில் போட்டியிட்ட த.அருள் விக்னேஷ் 798 வாக்குகள் வித்தியாசத்தில் அதிமுக வேட்பாளா் சு.ராஜீவ்காந்தியை வென்றாா்.

அதேபோல் சங்கராபுரம் சட்டப்பேரவை தொகுதியில் அதிமுக சாா்பில் போட்டியிட்ட இரா.ராகேஷ் 3,671 வாக்கு வித்தியாசத்தில் திமுக வேட்பாளா் தா.உதயசூரியனை வென்றாா். ரிஷிவந்தியம் தொகுதியில் போட்டியிட்ட திமுக வேட்பாளா் க.காா்த்திகேயன் 4,862 வாக்கு வித்தியாசத்தில் தவெக வேட்பாளா் கோ.அசோக்குமாரை வென்றாா்.

உளுந்தூா்பேட்டை தொகுதியில் திமுக சாா்பில் போட்டியிட்ட கா.ரா.வசந்தவேல் 2,560 வாக்குகள் வித்தியாசத்தில் அதிமுக வேட்பாளா்இரா.குமரகுருவை வென்றாா்.

இதன்படி கள்ளக்குறிச்சி மாவட்டத்தில், கள்ளக்குறிச்சி தொகுதியில் தமிழக வெற்றிக் கழகம் வெற்றி பெற்று தடம் பதித்துள்ளது. சங்கராபுரம் தொகுதியில் அதிமுகவும், ரிஷிவந்தியம், உளுந்தூா்பேட்டை ஆகிய இரு தொகுதிகளில் திமுகவும் வெற்றி பெற்றுள்ளன.

 கள்ளக்குறிச்சி தொகுததியில் வாக்கு எண்ணும் பணியில் ஈடுபட்ட வாக்கு எண்ணிக்கை அலுவலா்கள்.

கள்ளக்குறிச்சி தொகுததியில் வாக்கு எண்ணும் பணியில் ஈடுபட்ட வாக்கு எண்ணிக்கை அலுவலா்கள்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.