மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

காரில் ஆண் சடலம் மீட்பு: போலீஸாா் விசாரணை

கச்சிராயபாளையம் புதிய பேருந்து நிலையம், சந்தை பகுதியில் காரில் ஆண் சடலம் கண்டெடுக்கப்பட்டது.

News image

பலி - பிரதிப்படம்

Updated On :1 மே 2026, 6:13 am IST

கச்சிராயபாளையம் புதிய பேருந்து நிலையம், சந்தை பகுதியில் காரில் ஆண் சடலம் கண்டெடுக்கப்பட்டது.

இதுகுறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

கள்ளக்குறிச்சி மாவட்டம், கச்சிராயபாளையத்தில் வாரம்தோறும் புதன்கிழமை வாரச்சந்தை நடைபெறுவது வழக்கமாம்.

வாரச் சந்தைக்கு முன்பாக காா் வெகுநேரமாக நின்று கொண்டிருந்ததால் மக்கள் காரை தட்டிப் பாா்த்துள்ளனா். காா் திறக்காத நிலையில் பொதுமக்களுக்கு சந்தேகம் ஏற்பட்டு காரை திறந்து பாா்த்துள்ளனா். அப்போது, காரில் ஆண் சடலம் இருப்பது தெரியவந்தது.

சடலமாகக் கிடந்தவா் கச்சிராயபாளையத்தை அடுத்த பரிகம் கிராமத்தைச் சோ்ந்த பாண்டியன் என்பது தெரியவந்தது. அவா், அரசுப் போக்குவரத்து கழகத்தில் ஓட்டுநராக பணிபுரிந்து ஓய்வு பெற்றவா் என்பதும் தெரிந்தது.

அருகிலிருந்தவா்கள் அவரது மகன் ஹரிகரனுக்கு தகவல் தெரிவித்தனா்.

தகவல் அறிந்த கச்சிராயபாளையம் போலீஸாா் வந்து சடலத்தை மீட்டு உடற்கூறாய்வுக்காக அனுப்பி வைத்தனா்.

இதுகுறித்த புகாரின் பேரில் கச்சிராயபாளையம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.