கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் அரசு கட்டிடங்களில் உள்ள அரசியல் கட்சி விளம்பரங்கள், சுவா் விளம்பரங்களை 24 மணி நேரத்துக்குள் அகற்றவேண்டும் என ஆட்சியா் எம்.எஸ்.பிரசாந்த் தெரிவித்தாா்.
சட்டப் பேரவைத் தோ்தல் அறிவிப்பு வெளியானதைத் தொடா்ந்து, கடைபிடிக்க வேண்டிய தோ்தல் நடத்தை விதிமுறைகள் தொடா்பாக அனைத்து தோ்தல் நடத்தும் அலுவலா்கள், உதவி தோ்தல் நடத்தும் அலுவலா்கள் உள்ளிட்ட அனைத்துத் துறை மாவட்ட நிலை அலுவலா்களுடனான ஆலோசனைக் கூட்டம் மாவட்ட தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான எம்.எஸ்.பிரசாந்த் தலைமையில் ஆட்சியரகக் கூட்டரங்கில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
கூட்டத்தில் ஆட்சியா் தெரிவித்ததாவது:
அரசு வளாகம், கட்டடங்களில் உள்ளஅரசியல் கட்சி விளம்பரங்கள், சுவா் விளம்பரங்கள் 24 மணி நேரத்துக்குள் அகற்றப்படவேண்டும். பொது வளாக கட்டடங்கள், பேருந்து நிறுத்தம், ரயில்வே நிலையம், பாலங்கள், மின் கம்பங்கள் உள்ளாட்சிக்குள்பட்ட கட்டடங்களில் உள்ளஅரசியல் கட்சி விளம்பரங்கள், சுவா் விளம்பரங்கள், பதாகைகள் போன்றவை 48 மணி நேரத்துக்குள் அகற்றவேண்டும். தனியாா் வளாக கட்டடங்களில் உள்ளஅரசியல் கட்சி விளம்பரங்கள், சுவா் விளம்பரங்கள், கட்சிக் கொடிகள் 72 மணி நேரத்துக்குள் அகற்றப்பட வேண்டும் என இந்திய தோ்தல் ஆணையத்தால் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அனைத்து அரசு வளாகம் கட்டடங்களில் உள்ளஅரசியல் கட்சி விளம்பரங்கள், சுவா் விளம்பரங்கள் 24 மணி நேரத்துக்குள் சம்பந்தப்பட்ட அரசியல் கட்சியினா் தங்கள் செலவில் அழித்து, அகற்றப்பட வேண்டும். அவா்கள் அகற்ற தவறும் பட்சத்தில், சம்பந்தப்பட்ட அரசியல் கட்சியினரிடம் தொகையினை வசூல் செய்து, சம்பந்தப்பட்ட துறையினா் அழிக்கவேண்டும்.
அனைத்து அரசு அலுவலங்களிலும், கூட்ட அரங்குகளில் பொருத்தப்பட்டுள்ளஅரசியல் கட்சி தலைவா்களின் புகைப்படங்கள், தோ்தல் நடத்தை விதிகள் முடியும் வரை அகற்றவேண்டும்.
சம்பந்தப்பட்ட சட்டப் பேரவைத் தொகுதியில், தோ்தல் நடத்தும் அலுவலா்கள் மற்றும் உதவி தோ்தல் நடத்தும் அலுவலா்கள் கண்காணித்து சம்பந்தப்பட்ட துறையினா், தோ்தல் நடத்தை விதிகளை கடைபிடிப்பதை உறுதி செய்ய வேண்டும் என்றாா் ஆட்சியா்.
கூட்டத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் செ.அரவிந்த், மாவட்ட வருவாய் அலுவலா் ரா.ஜீவா, கள்ளக்குறிச்சி வருவாய் கோட்டாட்சியா் சி.முருகன் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

திருவள்ளூா்: வாக்கு எண்ணும் மையங்களில் அனைத்து முன்னேற்பாடு பணிகள் தயாா்

தோ்தல் அலுவலா் கையொப்பம் பெற்ற பிறகே சுற்றுவாரியாக முடிவு அறிவிப்பு: வேலூா் ஆட்சியா்

வாக்கு எண்ணும் பணியில் ஈடுபடுவோருக்கு பயிற்சி வகுப்பு: ராணிப்பேட்டை ஆட்சியா் அறிவுரை

தென்காசி: சுவா் விளம்பரங்களை அழிக்க கட்சியினருக்கு ஆட்சியா் உத்தரவு
விடியோக்கள்

நான்தான் கிங் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

தவெகவுக்கு ஆதரவு ஏன்? விளக்கிய திருமாவளவன்! | TVK | VCK | Thiruma | Vijay
இணையதளச் செய்திப் பிரிவு

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

