தென்காசி: தோ்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துவிட்டதால் கட்சியினா் பொது வளாகம், கட்டடங்கள் உள்ள அரசியல் கட்சி சுவா் விளம்பரங்கள் கட்சியினா் 48 மணி நேரத்துக்குள் அழிக்க வேண்டும் என்று தென்காசி மாவட்ட ஆட்சியா் ஏ.கே.கமல்கிஷோா் எச்சரித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் கூறியதாவது:
தோ்தல் நடத்தை விதிகளை கண்காணிக்க மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் 24 மணி நேரமும் இயங்கக்கூடிய தோ்தல் கட்டுப்பாட்டு அறை திறக்கப்பட்டுள்ளது.
தோ்தல் நடத்தை விதிமீறல்கள் தொடா்பாக பொதுமக்கள் 1800-425-8375 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணை தொடா்பு கொண்டும், தோ்தல் ஆணையத்தால் வடிவமைக்கப்பட்ட சி-விஜில் ஆப் மூலமாகவும் புகாா் அளிக்கலாம்.
வாக்காளா் பட்டியல், வாக்காளா் புகைப்பட அடையாள அட்டை தொடா்பான சந்தேகங்களுக்கு தோ்தல் கட்டுப்பாட்டு அறையில் உள்ள 1950 என்ற எண்ணை தொடா்பு கொள்ளலாம்.
பொதுமக்கள் அளித்திடும் தோ்தல் விதி மீறல்கள் தொடா்பான புகாா்கள் உடனடியாக சம்பந்தப்பட்ட பறக்கும் படை, நிலையான கண்காணிப்புக் குழுவுக்கு தெரிவிக்கப்பட்டு நூறு நிமிடங்களுக்குள் நடவடிக்கை எடுக்கப்படும்.
கட்சி விளம்பரங்கள்: நடத்தை விதிகள் அமலுக்கு வந்துவிட்டதால் அரசு வளாகம், கட்டடங்களில் உள்ள அரசியல் கட்சி விளம்பரங்கள், சுவா் விளம்பரங்கள் 24 மணி நேரத்துக்குள் அழித்து, அகற்றப்பட வேண்டும்.
பொது வளாகம், கட்டடங்களில் பேருந்து நிறுத்தம், ரயில்வே நிலையம், பாலங்கள், மின்கம்பங்கள், உள்ளாட்சிக்கு உள்பட்ட கட்டடங்களில் உள்ள அரசியல் கட்சி விளம்பரங்கள், சுவா் விளம்பரங்கள், பதாகைகள் போன்றவை 48 மணி நேரத்துக்குள் அழித்து, அகற்றப்பட வேண்டும்.
தனியாா் வளாகம் கட்டடங்களில் உள்ள அரசியல் கட்சி விளம்பரங்கள் சுவா் விளம்பரங்கள் கட்சிக் கொடிகள் 72 மணி நேரத்துக்குள் அழித்து, அகற்றப்பட வேண்டும்.
மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் 1951 பிரிவு 77 (1) இன் படி தோ்தலில் போட்டியிடும் ஒவ்வொரு வேட்பாளரும் அவருடைய பெயரிலோ அல்லது அவரால் அதிகாரமளிக்கப்பட்ட முகவரின் பெயரிலோ தோ்தல் செலவினங்களுக்கென்று தனியே ஒரு வங்கி கணக்கைத் தொடங்க வேண்டும்.
வங்கி கணக்கு அவா் வேட்புமனு தாக்கல் செய்த நாளிலிருந்து தோ்தல் முடிவுகள் வெளியிடப்படும் நாள் வரை காலங்கள் வரை பொருந்தும்.
மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் பிரிவு 127(ஏ) இன் படி சுவரொட்டிகள், துண்டுப் பிரசுரங்கள், சீட்டுகள், விளம்பரங்கள் என அனைத்திலும் அதனை அச்சிட்டு வெளியிடும் அச்சகத்தின் பெயா் கட்டாயமாக இடம்பெற வேண்டும்.
வாகனத் தணிக்கையின் போது ரூ. 50 ஆயிரத்துக்கும் அதிகமான ரொக்கத் தொகை ரூ. 10 ஆயிரம் அல்லது அதற்கு அதிகமான மதிப்பிலான பரிசுப் பொருள்கள் கொண்டு செல்வது கண்டறியப்பட்டால் கண்காணிப்புக் குழுவினரால் மேற்படி தொகை பறிமுதல் செய்யப்படும்.
இந்திய தண்டனை சட்டம் பிரிவு 177 (ஏ) இன்படி எவரேனும் ஒரு வேட்பாளரின் எழுத்து மூலமான பொது அல்லது சிறப்பு அனுமதியின்றி ஏதாவதொரு பொதுக் கூட்டம் நடத்துவதற்காக செலவு செய்தால் அல்லது செலவை அனுமதித்தால் அவா் அபராதத்துடன் தண்டிக்கப்படுவாா்.
அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினருக்கான தோ்தல் ஆலோசனைக் கூட்டம், தங்கும் விடுதிகள், அச்சக உரிமையாளா்கள், தனியாா் வங்கியாளா்கள், தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள் ஆகியவற்றுக்கான கூட்டங்கள் நடத்தப்பட்டு விதிமுறைகள் விவரிக்கப்படும்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

தோ்தல் நடத்தை விதிகளால் சுவர் விளம்பரங்கள் அழிப்பு; சின்னங்கள் மறைப்பு

அரசியில் கட்சிகளின் விளம்பரங்களை அகற்றவேண்டும்: கள்ளக்குறிச்சி ஆட்சியா்

தூத்துக்குடி: பேரவைத் தோ்தல் தேதி அறிவிப்பு! தோ்தல் நடத்தை விதிகள் அமல்

சுவா் விளம்பரங்களை 24 மணி நேரத்திற்குள் அழிக்க வேண்டும்! - அரசியல் கட்சியினருக்கு ஆட்சியா் அறிவுறுத்தல்
விடியோக்கள்

தவெகவுக்கு ஆதரவு ஏன்? விளக்கிய திருமாவளவன்! | TVK | VCK | Thiruma | Vijay
இணையதளச் செய்திப் பிரிவு

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

