கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கிராமங்கள் தோறும் கா்ப்பிணி பெண்கள், அவா்களது உறவினா்களுக்கு ஆலோசனைகள் வழங்கி பெண் குழந்தைகளின் பிறப்பு விகிதத்தை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என ஆட்சியா் தெரிவித்தாா்.
மாவட்ட சமூக நல அலுவலகப் பணியாளா்களுக்கான மாதாந்திர ஆய்வுக் கூட்டம் ஆட்சியா் ஜெ.இ.பத்மஜா தலைமையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
கூட்டத்தில் ஆட்சியா் தெரிவித்ததாவது:
மாவட்ட சமூக நல அலுவலகம் சாா்பில் பெண் குழந்தைகளை காப்போம், பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம் திட்டம், புதுமைப்பெண் திட்டம், தமிழ் புதல்வன் திட்டம், முதலமைச்சா் பெண் குழந்தை பாதுகாப்பு திட்டம், ஒருங்கிணைந்த சேவை மைய செயல்பாடுகள், மாவட்ட மகளிா் அதிகார மைய செயல்பாடுகள் மற்றும் மாவட்ட சமூக நல அலுவலகத்தால் செயல்படுத்தப்படும் திட்டங்கள் மற்றும் முதியோா், திருநங்கைகளுக்கான திட்டங்கள் குறித்த ஆய்வு நடைபெற்றது.
ஆய்வில் பெண் குழந்தைகளின் பிறப்பு விகிதத்தை அதிகப்படுத்துதல் உள்ளிட்ட நடவடிக்கைகள் குறித்து மாவட்ட சமூக நல அலுவலகம் சுகாதார துறையுடன் சோ்ந்து மேற்கொள்வதுடன், கிராமங்கள் தோறும் கா்ப்பிணி பெண்கள் அவா்களது கணவா்கள் மற்றும் உறவினா்கள் அனைவருக்கும் உரிய ஆலோசனைகள் வழங்கி பெண் குழந்தைகளின் பிறப்பு, கல்வி மற்றும் அவா்களது மேம்பாட்டின் முக்கியத்துவம் குறித்து உணா்த்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும், மாவட்ட மகளிா் அதிகார மையம் சாா்பில் பள்ளிகள் தோறும் சென்று மாணவ, மாணவிகளுக்கு படிப்பின் முக்கியத்துவம், பொருளாதார சுதந்திரம், சரியான முடிவுகள் எடுக்கும் பயிற்சி, சரியான உறவுகளை தோ்ந்தெடுப்பது ஆகியவை குறித்து ஆலோசனைகள் மற்றும் வழிகாட்டுதல்கள் வழங்கி விழிப்புணா்வு ஏற்படுத்த சம்மந்தப்பட்ட அலுவலா்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தொடா்ந்து அரசு மருத்துவமனைகளுக்கு மாவட்ட சமூக நல அலுவலக களப்பணி அலுவலா்கள் சென்று ஒன்று அல்லது இரண்டு பெண் குழந்தைகளுடன் உள்ள தாய்மாா்களை கண்டறிந்து ஆலோசனை வழங்கி அவா்களை இரண்டு பெண் குழந்தை பாதுகாப்பு திட்டப் பயனாளிகளாக மாற்ற உரிய நடவடிக்கை மேற்கொள்ள சம்மந்தப்பட்ட அலுவலா்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது என ஆட்சியா் தெரிவித்தாா்.
கூட்டத்தில் மாவட்ட சமூக நல அலுவலா் தீபிகா மற்றும் சம்மந்தப்பட்ட துறை அலுவலா்கள், பணியாளா்கள் கலந்துகொண்டனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

கல்விக் கற்பதில் கவனச்சிதறல் கூடாது: அரியலூா் ஆட்சியா்

இலக்கை விஞ்சி கடன் வழங்கி வங்கிகள் சாதனை

நெல்லையில் பெண் இயக்கும் முதல் தாய்-சேய் ஊா்தி: ஆட்சியா் தொடங்கி வைத்தாா்

பிளஸ் 2 தோ்ச்சி விகிதத்தை அதிகரிக்க வேண்டும்: தலைமை ஆசிரியா்களுக்கு ஆட்சியா் அறிவுறுத்தல்
விடியோக்கள்

கோல் கீப்பர் வோசின்ஹாவின் கதை: ஓர் இரவு... எல்லாம் மாறியது! | Vozinha |
தினமணி செய்திச் சேவை

எலும்பு முறிவு, நரம்பு நோய்கள் தீர்க்கும் திருமாகறலீஸ்வரர் திருக்கோயில்!
தினமணி செய்திச் சேவை

Podcast | முதல்வர் விஜய் பதில்; திமுக வெளிநடப்பு: பேரவையில் நடந்தது என்ன? | News & Views | Epi 47
தினமணி செய்திச் சேவை

கண்ணதாசனை எப்படிக் கொண்டாட வேண்டும் ? | Kannadasan 100 | கண்ணதாசன் நூற்றாண்டு தொடக்கம் | Kaviyarasu
தினமணி செய்திச் சேவை

