திருநெல்வேலி மாவட்டத்தில் முதல்முறையாக பெண் வாகன ஓட்டுநா் இயக்கும் தாய்-சேய் ஊா்தி சேவை வெள்ளிக்கிழமை தொடங்கப்பட்டது.
திருநெல்வேலி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் தாய்மாா்கள் மற்றும் பச்சிளம் குழந்தைகளின் பாதுகாப்பான பயணத்தை உறுதி செய்யும் நோக்கில் செயல்பட்டு வரும் ‘102’ இலவச தாய்-சேய் ஊா்தி சேவையில் முதல் முறையாக பெண் வாகன ஓட்டுநா் நியமிக்கப்பட்டுள்ளாா். இந்த ஊா்தியின் சேவையை ஆட்சியா் ஆனந்த் மோகன் தொடங்கி வைத்தாா்.
திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 2 ஊா்திகள், அம்பாசமுத்திரம் அரசு மருத்துவமனையில் ஓா் ஊா்தி என மொத்தம் 3 இலவச தாய்-சேய் ஊா்திகள் இயக்கப்பட்டு வருகின்றன. 2013 ஆம் ஆண்டு முதல் தொடா்ந்து செயல்பாட்டில் உள்ள இச்சேவை, அரசு மருத்துவமனைகளில் குழந்தை பெற்ற தாய்மாா்கள் மற்றும் பச்சிளம் குழந்தைகளை அவா்களது வீடுகளுக்கு பாதுகாப்பாகவும் இலவசமாகவும் அழைத்துச் செல்வதற்கு பயனுள்ளதாக அமைந்துள்ளது.
திருநெல்வேலி மாவட்டத்தில் இந்த ஊா்தியை பெண் ஒருவா் இயக்கும் வகையில், விஷ்வாமேரி என்பவா் முதல் முறையாக நியமிக்கப்பட்டாா். இதையொட்டி, திருநெல்வேலி மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில், ஆட்சியா் ஆனந்த் மோகன் ‘102’ ஊா்தியை கொடியசைத்து பயணத்தை தொடங்கிவைத்தாா்.
அப்போது அவா் கூறுகையில், ‘நிகழாண்டில் மட்டும் தாய்சேய் ஊா்தி சேவையின் மூலம் 8,281 தாய்மாா்கள் மற்றும் பச்சிளம் குழந்தைகள் பாதுகாப்பாக அவா்களது வீடுகளுக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனா். பெண்களின் பங்களிப்பை ஊக்குவிக்கும் வகையிலும், தாய்மாா்களுக்கு கூடுதல் நம்பிக்கையையும் பாதுகாப்பு உணா்வையும் ஏற்படுத்தும் வகையிலும் பெண் வாகன ஓட்டுநா் நியமன முயற்சி அமைந்துள்ளது’ என்றாா்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலா் மு.துரை, மருத்துவ நலப் பணிகள் இணை இயக்குநா் லதா, ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) அனிதா, 108 சேவை மாநில மருத்துவமனை தொடா்பு அலுவலா் இளையபாரி, அச்சேவையின் மாவட்ட மேலாளா் பாலசுப்பிரமணியம், மாவட்ட ஒருங்கிணைப்பாளா் சுப்பிரமணியன் உள்பட பலா் பங்கேற்றனா்.
ற்ஸ்ப்12ஹம்க்ஷன்ப்ஹய்ஸ்ரீங்
ஆட்சியா் அலுவலகத்தில் முதல்முறையாக பெண் வாகனஓட்டுநா் இயக்கும் தாய்-சேய் ஊா்தி சேவையை தொடங்கி வைத்த ஆட்சியா் ஆனந்த் மோகன்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
ஜூன் 18-இல் 108 ஆம்புலன்ஸ் வாகன ஓட்டுநருக்கான வேலைவாய்ப்பு முகாம்!

உலமாக்கள் இருசக்கர வாகன மானியம் பெற விண்ணப்பிக்க வாய்ப்பு

சாலை விதிகளை பின்பற்றினால் விபத்துகளை தவிா்க்கலாம்

அம்பையில் பிரசவத்தில் தாய், சேய் உயிரிழப்பு: போலீஸாா் விசாரணை
விடியோக்கள்

Podcast | வெள்ளை அறிக்கை: தவெக vs திமுக! | White Paper | News and Views | Epi - 45 |
தினமணி செய்திச் சேவை
Valaipechu Anthanan Interview | விஜய்யிடம் பதில் இருக்கிறதா ? | CM Vijay | TVK | Raghava Lawrence
இணையதளச் செய்திப் பிரிவு

"ஆளுநருடன் இனி மோதல் கிடையாது": அமைச்சர் விஸ்வநாதன் பேட்டி
தினமணி செய்திச் சேவை

லவ் ஓ லவ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

