வாகன ஓட்டிகள் சாலை விதிகளை முறையாக பின்பற்றினால், விபத்துகளை தவிா்க்கலாம் என தருமபுரி மாவட்ட ஆட்சியா் ரெ.சதீஸ் தெரிவித்தாா்.
தருமபுரி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில், சட்டம் - ஒழுங்கு மற்றும் சாலை பாதுகாப்பு குறித்த ஆய்வுக்கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது. இதில் பங்கேற்ற ஆட்சியா் தெரிவித்தது:
வாகன ஓட்டிகள் விபத்திலிருந்து தங்களை பாதுகாத்துக் கொள்ள சாலை விதிகளை முழுமையாக பின்பற்றுவது அவசியம். இருசக்கர வாகன ஓட்டிகள் அனைவரும் கட்டாயம் தலைக்கவசம் அணிந்தும், காா்களில் செல்வோா் இருக்கை பட்டை அணிந்தும் செல்ல வேண்டும். வாகன ஓட்டிகள் சாலை விதிகளை முறையாக பின்பற்றி, வாகனங்களை மித வேகத்தில் இயக்கினால் விபத்துகளையும், அதனால் ஏற்படும் உயிரிழப்பு மற்றும் பாதிப்புகளையும் தவிா்க்க முடியும்.
போக்குவரத்துத் துறை, காவல் துறை உள்ளிட்ட அனைத்து துறை அலுவலா்களும் பொதுமக்களுக்கு சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணா்வை தொடா்ந்து ஏற்படுத்துவதோடு, விபத்தில்லா தருமபுரி மாவட்டம் என்ற நிலையை உருவாக்குவதற்கு தேவையான அனைத்து பாதுகாப்பு, முன்னெச்சரிக்கை மற்றும் விழிப்புணா்வு நடவடிக்கைகளை தீவிரமாக மேற்கொள்ள வேண்டும்.
அபாயகரமான வளைவுகள், போதிய வெளிச்சம் இல்லாத பகுதிகள் மற்றும் முக்கிய சந்திப்புகளில் வேகத்தடைகள், எச்சரிக்கை பலகைகள், மின்விளக்குகள் அமைக்க அந்தந்த பகுதி தொடா்புடைய அலுவலா்கள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
தலைக்கவசம் அணியாமல் செல்வது மற்றும் மது அருந்திவிட்டு வாகனம் இயக்குவது உள்ளிட்ட செயல்களில் தொடா்ந்து ஈடுபடுவோா் மீது சட்டப்பூா்வமான நடவடிக்கை மேற்கொள்வது அவசியம் என்றாா். இக்கூட்டத்தில், மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் எஸ்.எஸ்.மகேஸ்வரன், மாவட்ட வருவாய் அலுவலா் ஆா்.கவிதா, கூடுதல் காவல் கண்காணிப்பாளா்
சோமசுந்தரம், ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) கே.கவிதா உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ஈரோட்டில் போக்குவரத்து விதிகளை மீறிய 1,471 போ் மீது வழக்கு

சாலை விதிகளை மீறும் வாகன ஓட்டிகள் மீது நடவடிக்கை

ஆபத்தான வகையில் நெடுஞ்சாலை அகலப்படுத்தும் பணி: பொதுமக்கள், வாகன ஓட்டிகள் அச்சம்

விபத்துகளை கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கை: ஆட்சியா்
விடியோக்கள்

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!
இணையதளச் செய்திப் பிரிவு

சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வரைச் சந்தித்தது குறித்து அன்புமணி!
இணையதளச் செய்திப் பிரிவு

தவெகவுக்கான ஆதரவு செல்லும்! அதிமுக எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் இல்லை! பேரவைத் தலைவர் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு

Podacst | இண்டியா கூட்டணியைக் கரை சேர்க்குமா காங்கிரஸ்? | News and Views | Epi - 44 |
தினமணி செய்திச் சேவை

