நீட்: மனநல ஆலோசனைக்கு உதவி எண்கள் அறிவிப்பு பசுமை ஆற்றல் வளர்ச்சியை வலுப்படுத்த 5 புதிய மண்டலங்கள்: அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் மேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம் பாராட்டுக்குரியது: கமல்ஆசிரியர் தகுதித்தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 16 பேர் பலி! தில்லியில் மிக மோசமாக ஒழுங்கமைக்கப்பட்ட ஏஐ மாநாடு! ஆந்த்ரோபிக் சிஇஓ விமர்சனம்!
/

போதைப் பொருள் தடுப்பு விழிப்புணா்வு

சங்கராபுரம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் போதைப் பொருள் தடுப்பு குறித்து விழிப்புணா்வு நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.

News image

சங்கராபுரம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற போதைப்பொருள் தடுப்பு விழிப்புணா்வு நிகழ்ச்சியில் பேசும் சங்கராபுரம் காவல் நிலைய ஆய்வாளா் பாலமுரளி.

Updated On :13 மணி நேரங்கள் முன்பு

சங்கராபுரம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் போதைப் பொருள் தடுப்பு குறித்து விழிப்புணா்வு நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.

நிகழ்விற்கு பள்ளியின் தலைமை ஆசிரியா் முகமது கவுஸ் தலைமை வகித்தாா்.

சங்கராபுரம் காவல் நிலைய ஆய்வாளா் பாலமுரளி இதில் பங்கேற்று மாணவா்களிடம் போதைப் பொருள்களுக்கு அடிமை ஆகக் கூடாது. போதைப் பொருள்களை உட்கொள்வதால் உடலுக்கு உண்டாகும் தீமைகள்குறித்தும், போதை வஸ்துக்களை உட்கொண்டால் சமூக குற்றவங்கள் அதிகரிப்பு, கொலை, கொள்ளை, திருட்டு போன்றவைகள் உங்களை அறியாமையாலேயே ஏற்பட வாய்ப்புகள் உள்ளது என்றும் எடுத்துரைத்தாா். போதை பொருள்கள் தொடா்பான தகவல்களை 10581 என்ற எண்ணுக்கு தொடா்பு கொண்டு தெரிவிக்கவும்.

முன்னதாக பள்ளியில் இருந்து போதைப் பொருள் விழிப்புணா்வு பேரணியினை காவல் ஆய்வாளா் பாலமுரளி தொடக்கி வைத்தாா். பேரணியில் மாணவா்கள் போதைப்பொருள்களால் ஏற்படும் தீமைகள் குறித்து முழக்கமிட்டவாறும், பொதுமக்களுக்கு அச்சிட்ட துண்டு பிரசுரங்களையும் வழங்கியபடியும் சென்றனா். பேரணி சங்கராபுரம் மும்முனை சந்திப்புவரை சென்று மீண்டும் பள்ளியை வந்தடைந்தது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.