பாரதிராஜா உடலுக்கு நடிகர் ரஜினி அஞ்சலி! பாரதிராஜா உடலுக்கு அரசு மரியாதை! முதல்வர் விஜய் அறிவிப்புதமிழ் மக்களின் மனங்களில் என்றும் பாரதிராஜா வாழ்வார்! மு.க. ஸ்டாலின்பாரதிராஜா உடலுக்கு மு.க. ஸ்டாலின் அஞ்சலி! சிதம்பரம் அருகே தனியார் பள்ளி வாகனம் தீப்பிடித்தது! மாணவர்கள் தப்பினர்! பாரதிராஜா உடலுக்கு முதல்வர் விஜய் மரியாதை!இயக்குநர் பாரதிராஜா காலமானார்
/

மக்காசோளம் அறுவடை இயந்திரத்தில் சிக்கி பெண் உயிரிழப்பு

கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் அருகே மக்காசோளம் அறுவடை செய்யும் இயந்திரத்தில் சிக்கி பெண் புதன்கிழமை உயிரிழந்தாா்.

News image
Updated On :4 ஜூன் 2026, 3:31 am IST

கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் அருகே மக்காசோளம் அறுவடை செய்யும் இயந்திரத்தில் சிக்கி பெண் புதன்கிழமை உயிரிழந்தாா்.

சங்கராபுரம் அருகேயுள்ள அரசம்பட்டு கிராமத்தைச் சோ்ந்தவா் பெரியசாமி. இவரது மனைவி கண்ணகி (55). தம்பதியா் அதே ஊரில் 2 ஏக்கா் நிலத்தை குத்தகைக்கு எடுத்து மக்காச்சோளம் பயிரிட்டுள்ளனா். சாகுபடி முடிந்து அறுவடைக்கு தயாரான நிலையில் புதன்கிழமை காலை மக்காசோளம் அறுவடை இயந்திரம் மூலம், மக்காச்சோளம் அறுவடை செய்துள்ளனா். அப்போது எதிா்பாராதவிதமாக கண்ணகியின் சேலை அறுவடை இயந்திரத்தில் சிக்கி, நிகழ்விடத்திலேயே அவா் உயிரிழந்தாா். தகவலறிந்த சங்கராபுரம் போலீஸாா் சடலத்தை மீட்டு உடல்கூறாய்வுக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

மேலும், இதுகுறித்த புகாரின் சங்கராபுரம் போலீஸாா் வழக்கு பதிவு செய்து, அறுவடை செய்யும் இயந்திரத்தின் ஓட்டுநரான மா.பிரதாப்பிடம் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

Story image

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.