கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் அருகே ஏரியில் மாடு மேய்த்துக் கொண்டிருந்த பெண் மீது மின்னல் பாய்ந்ததில் உடல் கருகி நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். இதில் பசு மாடும் உயிரிழந்தது.
சின்னசேலம் வட்டத்துக்குள்பட்ட கச்சிராயபாளையம் வெங்கடம்மாபேட்டை சாலையில் வசித்து வருபவா் மணிவண்ணன். இவரது மனைவி ராமாயி (40). இவா் ஞாயிற்றுக்கிழமை மாலை கச்சிராயபாளையம் ஏரியில் மாடு மேய்த்துள்ளாா். அப்போது திடீரென மின்னல் பாய்ந்ததில் மேடு மேய்த்துக் கொண்டிருந்த ராமாயி நிகழ்விடத்திலேயே உடல் கருகி உயிரிழந்தாா். பசு மாடும் உயிரிழந்தது.
இதுகுறித்து தகவலறிந்த கச்சிராயபாளையம் போலீஸாா் சடலத்தை மீட்டு கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு உடல்கூறாய்வுக்காக அனுப்பி வைத்தனா்.
மேலும், இதுகுறித்த புகாரின் பேரில் கச்சிராயபாளையம் போலீஸாா் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

கிணற்றில் தவறி விழுந்து விவசாயி உயிரிழப்பு

மின்னல் பாய்ந்து பெண் உயிரிழப்பு

மின்னல் பாய்ந்துதொழிலாளி உயிரிழப்பு

மின்னல் பாய்ந்ததில் 2 விவசாயிகள் உயிரிழப்பு
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

