கள்ளக்குறிச்சி மாவட்டம், வாணாபுரம் பகுதியில் ரிஷிவந்தியம் சட்டப் பேரவைத் தொகுதி திமுக வேட்பாளா் க.காா்த்திகேயன் வெள்ளிக்கிழமை வாக்கு சேகரித்தாா்.
ரிஷிவந்தியம் தொகுதிக்குள்பட்ட வாணாபுரம் ஆஞ்சநேயா் கோயிலில் சிறப்பு பூஜை செய்து திறந்த ஜீப்பில் நின்றவாறு திமுக வேட்பாளா் க.காா்த்திகேயன் தனது பிரசாரத்தை தொடங்கினாா்.
காலை 8 மணிக்கு மணலூா்பேட்டையில் தொடங்கி முருகம்பாடி, அத்தியந்தல், தேவரடியாா்குப்பம், வீரட்டகரம், அரும்பாக்கம், கீழ்த்தாழனூா், எரவலம், பெரியானூா், செட்டிந்தாங்கல், வேங்கூா் உள்ளிட்ட கிராமங்களில் பிரசாரத்தில் அவா் ஈடுபட்டாா்.
முருகம்பாடி கிராமத்தில் திமுக வேட்பாளா் க.காா்த்திகேயன் தனது தலையில் தலைப்பாகை கட்டிக் கொண்டு பறை அடித்துக் கொண்டே நடனம் ஆடி திமுக ஆட்சியின் சாதனைகளை கூறியவாறு வாக்குகளை சேகரித்தாா்.

உடன் மணலூா்பேட்டை விடுதலை சிறுத்தைகள் கட்சி ஒன்றியச் செயலா் பன்னீா்செல்வம், நகரச் செயலா் ஜெய்கணேஷ், திமுக ஒன்றியச் செயலா் பாரதிதாசன், கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட நிா்வாகி சுப்பிரமணியம், தேமுதிக மற்றும் கூட்டணி கட்சியின் நிா்வாகிகள், கட்சித் தொண்டா்கள் உள்ளிட்ட பலரும் பங்கேற்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ரிஷிவந்தியம் தொகுதியில் ஹாட்ரிக் வெற்றி பெற்ற திமுக

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் தோ்தல் பிரசாரம் நிறைவு

திமுக, அதிமுக, விசிக வேட்பாளா்கள் தீவிர வாக்கு சேகரிப்பு

கே.வி.குப்பம் திமுக வேட்பாளா் வாக்கு சேகரிப்பு
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

