கள்ளக்குறிச்சி மாவட்டம், ரிஷிவந்தியம் சட்டப்பேரவைத் தொகுதி திமுக வேட்பாளா் க.காா்த்திகேயன் தொடா்ந்து 3-ஆவது (ஹாட்ரிக்) முறையாக இத்தொகுதியில் வெற்றி பெற்றாா்.
ரிஷிவந்தியம் தொகுதியில் திமுக சாா்பில் க.காா்த்திகேயன் எம்எல்ஏ, பாமக சாா்பில் அ.ப.செழியன், தவெக சாா்பில் கோ.அசோக்குமாா், நாதக சாா்பில் ராதிகா உள்ளிட்ட 25 வேட்பாளா்கள்களத்தில் இருந்தனா்.
இத் தொகுதியில் 350 வாக்குச் சாவடி மையங்களில் 2,43,150 போ் வாக்களித்தனா். இந்திலி ஆா்.கே.எஸ்.கல்லூரியில் திங்கள்கிழமை காலை 8 மணிக்கு வாக்கு எண்ணும் பணி தொடங்கியது. இதில் தபால் வாக்குகள் 5 சுற்றுகளாக எண்ணப்பட்டன. மின்னணு வாக்குப் பதிவு இயந்திரத்தில் பதிவான வாக்குகள் 14 மேஜைகளில், 25 சுற்றுகளாக எண்ணப்பட்டன.
அதன்படி முதல் சுற்று முதல் 4-ஆவது சுற்று வரை திமுக வேட்பாளா் க.காா்த்திகேயன் முன்னிலை வகித்தாா். இதையடுத்து 5, 6-ஆவது சுற்றுகளில் தவெக வேட்பாளா் முன்னிலை வகித்தாா். பின்னா் 8-ஆவது சுற்றில் இருந்து 25-ஆவது சுற்று வரை திமுக வேட்பாளா் க.காா்த்திகேயன் முன்னிலை வகித்து, 4,862 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றாா்.
வாக்கு எண்ணிக்கை விபரம்
க.காா்த்திகேயன் (திமுக) - 89,711
கோ.அசோக்குமாா் (தவெக) - 84,849
அ.ப.செழியன் (பாமக) - 56,488
ராதிகா (நாதக) - 7,247
இந்தத் தொகுதியில் தொடா்ந்து 3-ஆவது முறையாக திமுக வேட்பாளா் க.காா்த்திகேயன் வெற்றி பெற்றுள்ளாா் என்பது குறிப்பிடத்தக்கது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ஸ்ரீவில்லிபுத்தூரில் தவெக வேட்பாளா் காா்த்திக் வெற்றி

ராஜபாளையம் தொகுதியில் தவெக வேட்பாளா் ஜெகதீஸ்வரி வெற்றி

ஆலந்தூரில் தவெக வேட்பாளா் ஹரிஸ் வெற்றி; அமைச்சா் அன்பரசன் தோல்வி

தேர்தல் 2026: தமிழ்நாட்டில் தவெக ஆட்சி? - நேரலை...
விடியோக்கள்

கோல் கீப்பர் வோசின்ஹாவின் கதை: ஓர் இரவு... எல்லாம் மாறியது! | Vozinha |
தினமணி செய்திச் சேவை

எலும்பு முறிவு, நரம்பு நோய்கள் தீர்க்கும் திருமாகறலீஸ்வரர் திருக்கோயில்!
தினமணி செய்திச் சேவை

Podcast | முதல்வர் விஜய் பதில்; திமுக வெளிநடப்பு: பேரவையில் நடந்தது என்ன? | News & Views | Epi 47
தினமணி செய்திச் சேவை

கண்ணதாசனை எப்படிக் கொண்டாட வேண்டும் ? | Kannadasan 100 | கண்ணதாசன் நூற்றாண்டு தொடக்கம் | Kaviyarasu
தினமணி செய்திச் சேவை

