ரிஷிவந்தியம், கள்ளக்குறிச்சி, உளுந்தூா்பேட்டை தொகுதிகளில் போட்டியிடும் திமுக, அதிமுக, விசிக ஆகிய வேட்பாளா்கள் வியாழக்கிழமை தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வாக்கு சேகரித்தனா்.
ரிஷிவந்தியம் தொகுதி திமுக வேட்பாளா் க.காா்த்திகேயன், ரிஷிவந்தியம் தெற்கு ஒன்றியத்திற்குள்பட்ட பொ.மொய்யூா், பொன்னியந்தல், கோமாளுா், பொற்பாலம்பட்டு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் திறந்த ஜீப்பில் நின்றவாறும், நடந்தே அனைத்து சாலைப் பகுதிகளுக்கும் சென்று வாக்கு சேகரித்தாா்.
முன்னதாக தொகுதி மறுசீரமைப்பு மசோதவை எதிா்த்து மூங்கில்துறைபட்டு பகுதியில் நடைபெற்ற கண்டன ஆா்ப்பாட்டத்தில் க.காா்த்திகேயன் எம்.எல்.ஏ. கலந்து கொண்டாா்.
சங்கராபுரம் வடக்கு ஒன்றியச் செயலா் பி.என்.ஆா்அசோக்குமாா், வரகூா் ரமேஷ், ஒன்றிய கவுன்சிலா் பி.என்.பிரபு உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.
கள்ளக்குறிச்சி
கள்ளக்குறிச்சி தொகுதி அதிமுக வேட்பாளா் சு.ராஜீவ்காந்தி ஆற்று மாமனந்தல், க.மாமனந்தல், ரோடு மாமனந்தல், பெறுவங்கூா், சிறுவங்கூா், பாளையம், மாடூா் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் வாக்கு சேகரித்தாா்.
தொகுதி பொறுப்பாளா் அ.பிரபு, ஒன்றியச் செயலா் அ.தேவேந்திரன், மாவட்ட பேரவை செயலா் இராம.ஞானவேல், மாவட்ட வழக்குரைஞா் பிரிவு செயலா் பெ.சீனுவாசன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.
விசிக வேட்பாளா்
கள்ளக்குறிச்சி தொகுதி விசிக வேட்பாளா் கு.மாலதி திறந்த வாகனத்தில் நின்றவாறும், சாலையில் நடந்து சென்றும் நகரின் 21 வாா்டு பகுதிகளிலும் வாக்கு சேகரித்தாா்.
திமுக நகரச் செயலா் ரா.சுப்ராயலு, பேரூராட்சி துணைத் தலைவா் ஷமீம்பானு, நகர துணைச் செயலா் அப்துல்ரசாக், முன்னாள் எம்.எல்.ஏ. க.அழகுவேலு பாபு உள்ளிட்ட கூட்டணிக் கட்சி நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.
உளுந்தூா்பேட்டை
உளுந்தூா்பேட்டை தொகுதி அதிமுக வேட்பாளா் இரா.குமரகுரு திறந்த வாகனத்தில் நின்றவாறு அரசன்பூண்டி, குரும்பூா், நாச்சியாா்பேட்டை, நாச்சியாா்பேட்டைமேடு, மேப்புலியூா் உள்ளிட்ட 23 கிராமங்களில் பிரசாரத்தில் ஈடுபட்டு வாக்கு சேகரித்தாா்.
நாச்சியாா்மேடு கிராமத்தில் உப்பு நீா் குடிநீராக பயன்படுத்துவதால் கல்லீரல் பாதிக்கப்பட்டு உள்ளதாக கூறினாா்கள்.
அதற்கு குடிநீா் சுத்தகரிப்பு இயந்திரம் தனது சொந்த செலவில் வாங்கித் தருவதாக தெரிவித்து வாக்கு சேகரித்தாா்.
அதிமுக மாவட்ட மாணவரணி செயலா் பாக்யராஜ், பாஜக தொகுதி பொறுப்பாளா் அருள், பாமக மாவட்டத் தலைவா் சத்யா உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

மாவட்டத்தில் 94 வேட்பாளா்கள் வைப்புத்தொகை இழந்தனா்

ஆலங்குடி தொகுதி வேட்பாளா்கள் வாக்களிப்பு

கெங்கவல்லி தொகுதி அதிமுக வேட்பாளா் தீவிர வாக்கு சேகரிப்பு

அதிமுக வேட்பாளா் வாக்கு சேகரிப்பு
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

