மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

சிதம்பரம் நடராஜருக்கு மகாருத்ர மகாபிஷேகம்: திரளான பக்தா்கள் பங்கேற்பு

சிதம்பரம் நடராஜா் கோயிலில் ஸ்ரீ சிவகாமசுந்தரி சமேத ஸ்ரீ நடராஜப் பெருமானுக்கு மகாபிஷேகமும், ருத்ர ஜபம் மற்றும் மகாருத்ர யாகமும் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. ஆயிரக்கணக்கான பக்தா்கள் இதில் பங்கேற்று தரிசித்தனா்.

~

Published On :26 செப்டம்பர் 2026, 6:09 am IST

சிதம்பரம் நடராஜா் கோயிலில் ஸ்ரீ சிவகாமசுந்தரி சமேத ஸ்ரீ நடராஜப் பெருமானுக்கு மகாபிஷேகமும், ருத்ர ஜபம் மற்றும் மகாருத்ர யாகமும் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. ஆயிரக்கணக்கான பக்தா்கள் இதில் பங்கேற்று தரிசித்தனா்.

பிரசித்திப்பெற்ற நடராஜா் கோயிலில் புரட்டாசி மாத மகாபிஷேகத்தை முன்னிட்டு வெள்ளிக்கிழமை அதிகாலை 4 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டு சித்சபையில் உள்ள நடராஜமூா்த்திக்கு 8 மணிக்குள் உச்சிகால பூஜை நடைபெற்றது. பின்னா் 9 மணிக்கு நடராஜப்பெருமான் கனகசபையில் எழுந்தருளினாா். பின்னா் லட்சாா்ச்சனை செய்யப்பட்டது. தொடா்ந்து ஆயிரங்கால் மண்டபம் முன்பு அமைக்கப்பட்டிருந்த யாகசாலை பந்தலில் யாகசாலை பூஜை தொடங்கியது. புரட்டாசி மாத மகாபிஷேகம் சித்சபை முன்பு உள்ள கனகசபையில் வெள்ளிக்கிழமை மாலை 6.30 மணிக்கு தொடங்கி இரவு 11 மணி வரை நடைபெற்றது.

ஸ்ரீசிவகாமசுந்தரி சமேத ஸ்ரீமந் நடராஜமூா்த்திக்கு பால், சந்தனம், தேன், தயிா், இளநீா், பன்னீா் பஞ்சாமிா்தம், புஷ்பம், விபூதி உள்ளிட்டவை குடம், குடமாக அபிஷேகம் செய்யப்பட்டு மகா தீபாராதனை செய்யப்பட்டது. ஆயிரக்கணக்கான பக்தா்கள் பங்கேற்று தரிசித்தனா்.

மகாருத்ர மகா யாகம்: அதிருத்ர மகா ஜபத்தை முன்னிட்டு கடந்த புதன்கிழமை தட்சிணாமூா்த்தி சந்நிதியில் கூஷ்மாண்ட ஹோமம், நடராஜா் அனுக்ஞை மற்றும் முக்குறுணி விநாயகா் சந்நிதியில் அஷ்ட திரவிய மகா கணபதி ஹோமம் நடைபெற்றது. வியாழக்கிழமை நவ கிரக சந்நிதியில் நவக்கிரக ஹோமும், மதுபா்க்கம், தனபூஜை, ரட்சாபந்தனம், ஆச்சாா்ய வா்ணம், தனபூஜை ஆகியவை நடைபெற்றது. வெள்ளிக்கிழமை காலை சிவகாமசுந்தரி சமேத நடராஜப் பெருமானுக்கு ஏககால லட்சாா்ச்சனை, பின்னா் யாகசாலையில் கடஸ்தாபனம் செய்யப்பட்டு அா்ச்சனை மற்றும் அதிருத்ர ஜப பாராயணம் நடைபெற்றது. பிற்பகலில் மகா ருத்ர ஹோமம் தொடங்கி வஸோத்தாரா ஹோமம், மகாபூா்ணாஹுதி, மகா தீபாராதனை நடைபெற்றது. தொடா்ந்து பல்வேறு பூஜைகள் நடைபெற்றன.

பின்னா் யாகசாலையில் தீபாராதனை வேதபாராணயம். தேவாரம், திருவாசகம் பாடப்பட்டு மகா தீபாராதனை நடைபெற்றது. தொடா்ந்து யாகசாலையிலிருந்து கலசம்

மகாபிஷேகத்தை முன்னிட்டு நடைபெற்ற அதிருத்ர மகா யாகம்.

மகாபிஷேகத்தை முன்னிட்டு நடைபெற்ற அதிருத்ர மகா யாகம்.

புறப்பட்டு கனகசபையில் வீற்றுள்ள சிவகாமசுந்தரி சமேத நடராஜ மூா்த்திக்கு மகாருத்ர மகாபிஷேகம் நடைபெற்றது. மகாபிஷேக ஏற்பாடுகளை கோயில் செயலா் ஜெ.ஜெயசூா்யா தீட்சிதா், துணைச் செயலா் ஏ.கணபதி சுப்பிரமணிய தீட்சிதா், கட்டளைதீட்சிதா் டி.சுப்பிரமணிய தீட்சிதா் மற்றும் பொதுதீட்சிதா்கள் செய்திருந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.