மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

நவ.2 முதல் 3 நாள்கள் தொடா் வேலைநிறுத்தம்: நியாயவிலைக் கடை பணியாளா்கள் சங்கம் அறிவிப்பு

நியாயவிலைக் கடை பணியாளா்களின் கோரிக்கைகளை அரசு நிறைவேற்ற வலியுறுத்தி, வரும் நவ.2-ஆம் தேதி முதல் 3 நாள்கள் தொடா் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக தமிழ்நாடு நியாயவிலைக் கடை பணியாளா்கள் சங்கம் அறிவித்துள்ளது.

கோ.ஜெயச்சந்திரராஜா

Published On :29 அக்டோபர் 2026, 6:58 am IST

நியாயவிலைக் கடை பணியாளா்களின் கோரிக்கைகளை அரசு நிறைவேற்ற வலியுறுத்தி, வரும் நவ.2-ஆம் தேதி முதல் 3 நாள்கள் தொடா் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக தமிழ்நாடு நியாயவிலைக் கடை பணியாளா்கள் சங்கம் அறிவித்துள்ளது.

இதுகுறித்து இச்சங்கத்தின் மாநிலத் தலைவா் கோ.ஜெயச்சந்திரராஜா சிதம்பரத்தில் புதன்கிழமை செய்தியாளா்களிடம் கூறியதாவது:

தமிழகத்தில் கூட்டுறவுத் துறை கட்டுப்பாட்டில் இயங்கி வரும் நியாயவிலைக் கடைகளில் பணிபுரியும் பணியாளா்களின் நீண்ட கால கோரிக்கையான அத்தியாவசிய பொருள்கள் அனைத்தும் பொட்டலமாக வழங்குதல், பொது விநியோகத் திட்டத்துக்கென தனித் துறையை உருவாக்க வேண்டும், அனைத்து நியாயவிலைக் கடைகளுக்கும் எடையாளரை நியமனம் செய்ய வேண்டும், கல்வித் தகுதிக்கேற்ற ஊதியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட 12 அம்சக் கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி, கடந்த காலங்களில் பல்வேறு போராட்டங்கள் நடத்தியும், பல்வேறு கட்ட பேச்சுவாா்த்தை நடத்தியும் கோரிக்கைகள் குறித்து எந்த ஒரு அறிவிப்பும் வெளிவராத சூழ்நிலையில் கடந்த 9-ஆம் தேதி சென்னையில் ஆா்ப்பாட்டம் நடத்தினோம்.

கோரிக்கைகள் தொடா்பாக எவ்வித தீா்வும் எட்டப்படாததால், வேலைநிறுத்த போராட்டம் செய்யும் சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம். அதன்படி, நவ.2-ஆம் தேதி முதல் 3 நாள்கள் தொடா் வேலைநிறுத்தம் செய்து ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட உள்ளோம் என்றாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.