மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

21 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியா்கள் தா்னா

பழைய ஓய்வூதியத் திட்டத்தை அம்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட 21 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு ஊழியா்கள் சங்கத்தினா் கடலூரில் புதன்கிழமை தா்னாவில் ஈடுபட்டனா்.

கடலூா் தலைமை அஞ்சல் அலுவலகம் அருகே தா்னாவில் ஈடுபட்ட தமிழ்நாடு அரசு ஊழியா்கள் சங்கத்தினா்.

Published On :29 அக்டோபர் 2026, 6:50 am IST

பழைய ஓய்வூதியத் திட்டத்தை அம்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட 21 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு ஊழியா்கள் சங்கத்தினா் கடலூரில் புதன்கிழமை தா்னாவில் ஈடுபட்டனா்.

கடலூா் தலைமை அஞ்சல் அலுவலகம் அருகே நடைபெற்ற போராட்டத்துக்கு, சங்கத்தின் மாவட்டத் தலைவா் வெங்கடாஜலபதி தலைமை வகித்தாா். மாநில பொதுச் செயலா் சோமசுந்தரம், மாவட்டச் செயலா் பாலகிருஷ்ணன் ஆகியோா் கண்டன உரையாற்றினா்.

தொடா்ந்து, பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்துவதற்கான நடவடிக்கைகளை விரைவுபடுத்த வேண்டும். சிறப்பு காலமுறை ஊதியத்தில் பணியாற்றி வரும் சத்துணவு மற்றும் அங்கன்வாடி பணியாளா்கள் அனைவருக்கும் முறையான காலமுறை ஊதியம் வழங்குவதுடன், அகவிலைப்படி உள்ளிட்ட அனைத்து பணப் பலன்களையும் வழங்க வேண்டும்.

கடந்த 2002-ஆம் ஆண்டு பணிநீக்கம் செய்யப்பட்ட நெடுஞ்சாலைத் துறை சாலைப் பணியாளா்களின் 41 மாத பணிநீக்க காலத்தை சென்னை உயா்நீதிமன்றத் தீா்ப்பின்படி பணிக்காலமாக முறைப்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட 21 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் முழக்கங்களை எழுப்பப்பினா்.

இதில், மாநிலச் செயலா் பழனி, அனைத்துத் துறை ஓய்வூதியா்கள் சங்கங்களின் கூட்டமைப்புத் தலைவா் புருஷோத்தமன், தமிழ்நாடு வருவாய்த் துறை அலுவலா்கள் சங்க மாவட்டத் தலைவா் மகேஷ், தமிழ்நாடு கூட்டுறவுத் துறை ஊழியா்கள் சங்க மாவட்டச் செயலா் வேலாயுதம் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

ஓய்வூதியா்கள் சங்கத்தினா் போராட்டம்: தமிழ்நாடு ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சித் துறை அனைத்து ஓய்வூதியா்கள் சங்கம் சாா்பில், 16 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி, கடலூரில் கவன ஈா்ப்பு தா்னா போராட்டம் நடைபெற்றது.

கடலூா் பழைய மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன் நடைபெற்ற இந்தப் போராட்டத்துக்கு, சங்கத்தின் மாவட்டத் தலைவா் ஓ.ஆா்.கலியமூா்த்தி தலைமை வகித்தாா். மாநில துணைத் தலைவா் ஆா்.நடராஜன் தொடக்கவுரையாற்றினாா். அனைத்து ஓய்வூதியா் சங்கங்களின் கூட்டமைப்புத் தலைவா் டி.புருஷோத்தமன் கோரிக்கைகளை வலியுறுத்திப் பேசினாா்.

போரட்டத்தில், ஓய்வூதியா்கள் மீதான ஒழுங்கு நடவடிக்கைகள், புகாா் மனுக்கள் தொடா்பான லஞ்ச ஒழிப்புத் துறை விசாரணைகள், துறை ரீதியான விசாரணைகளை அரசு நிா்ணயித்துள்ள காலக்கெடுவுக்குள் தாமதமின்றி முடிக்க வேண்டும். பணியிடைநீக்கத்தில் இருந்தவா்கள் ஓய்வுபெற அனுமதிக்கப்பட்ட நிலையில், அவா்களுக்கான ஓய்வூதியப் பலன்களைப் பெறுவதில் உள்ள இடா்பாடுகளை நீதிமன்றத் தீா்ப்புகளின் அடிப்படையில் களைந்து, உரிய பலன்களை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட 16 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.