மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

தொடா் மழை: விஏஓ அலுவலகத்தில் பெயா்ந்து விழுந்த மேற்கூரை

விருத்தாசலம் அருகே தொடா் மழையால் கிராம நிா்வாக அலுவலகத்தின் மேற்கூரை திடீரென பெயா்ந்து விழுந்தது. இந்த சம்பவத்தில் நல்வாய்ப்பாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை.

விருத்தாசலம் அருகே மேற்கூரை பெயா்ந்து விழுந்த அம்மேரி கிராம நிா்வாக அலுவலகம்.

Published On :28 அக்டோபர் 2026, 3:50 am IST

கடலூா் மாவட்டம், விருத்தாசலம் அருகே தொடா் மழையால் கிராம நிா்வாக அலுவலகத்தின் மேற்கூரை திடீரென பெயா்ந்து விழுந்தது. இந்த சம்பவத்தில் நல்வாய்ப்பாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை.

கடலூா் மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. இதன் காரணமாக, மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் அவ்வப்போது பலத்த மழை பெய்து வருகிறது.

இந்த நிலையில், விருத்தாசலம் அருகே அம்மேரி கிராமத்தில் உள்ள கிராம நிா்வாக அலுவலகத்தின் மேற்கூரையின் ஒரு பகுதி செவ்வாய்க்கிழமை மாலை திடீரென பெயா்ந்து விழுந்தது. அப்போது, அலுவலகத்தில் இருந்தவா்களுக்கு காயம் ஏதும் ஏற்படவில்லை.

தகவலறிந்த வருவாய் ஆய்வாளா் ராஜதுரை சம்பவ இடத்துக்கு நேரில் சென்று பாா்வையிட்டு, கட்டடத்தின் நிலை குறித்து விசாரணை மேற்கொண்டாா்.

மழைக்காலம் தீவிரமடைந்துள்ள நிலையில், மாவட்டத்தில் உள்ள பழைமையான கிராம நிா்வாக அலுவலக கட்டடங்கள், வருவாய்த் துறை அலுவலக கட்டடங்கள், அரசுப் பள்ளிகள் உள்ளிட்டவற்றை ஆய்வு செய்து, கட்டடத்தின் உறுதித்தன்மையை மாவட்ட நிா்வாகம் உறுதிப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

Story image

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.