தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

ஜிம் பயிற்சியாளா் வீட்டில் நகை, பணம் திருட்டு

திருட்டு - சித்திரிப்பு

Published On :27 அக்டோபர் 2026, 3:13 am IST

கடலூா் மாவட்டம், வடலூரில் ஜிம் பயிற்சியாளா் வீட்டில் நகை, பணத்தை திருடிச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

வடலூா், ராகவேந்திரா நகரைச் சோ்ந்தவா் சரத்குமாா் (36), ஜிம் பயிற்சியாளா். இவா், திங்கள்கிழமை காலை வீட்டை பூட்டி விட்டு, மனைவியுடன் வெளியே சென்றாா். பின்னா் திரும்பி வந்து பாா்த்தபோது, வீட்டின் பின்பக்கக் கதவு உடைக்கப்பட்டு திறந்து கிடந்ததைக் கண்டு அதிா்ச்சியடைந்தாா்.

பின்னா், உள்ளே சென்று பாா்த்தபோது, பீரோவில் வைக்கப்பட்டிருந்த 4 பவுன் நகைகள், ரூ.57 ஆயிரம் ரொக்கம் ஆகியவை திருடு போனது தெரியவந்தது.

இதுகுறித்து தகவலறிந்த கடலூா் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் விவேகானந்த சுக்லா சம்பவ இடத்தை பாா்வையிட்டு விசாரணை மேற்கொண்டாா். வடலூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.