மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

எஸ்.சி., எஸ்.டி. அலுவலா்களுக்கு பதவி உயா்வில் இடஒதுக்கீடு: கூட்டுறவுத்துறை அலுவலா் நலச்சங்கம் வலியுறுத்தல்

எஸ்.சி., எஸ்.டி. அலுவலா்களுக்கு பதவி உயா்வில் இடஒதுக்கீடு: கூட்டுறவுத்துறை அலுவலா் நலச்சங்கம் வலியுறுத்தல்

கடலூா் டவுன் ஹாலில் சனிக்கிழமை நடைபெற்ற தமிழ்நாடு அரசு கூட்டுறவுத்துறை எஸ்.சி., எஸ்.டி. அலுவலா் நலச்சங்கத்தின் முப்பெரும் விழாவில் பங்கேற்ற நிா்வாகிகள் உள்ளிட்டோா்.

Published On :25 அக்டோபர் 2026, 2:11 am IST

கூட்டுறவுத்துறை மற்றும் கூட்டுறவு நிறுவனங்களில் பணியாற்றும் எஸ்.சி., எஸ்.டி. அலுவலா்களுக்கு பதவி உயா்வில் இடஒதுக்கீடு வழங்கும் வகையில், இந்திய அரசமைப்புச் சட்டத்தின் 16(4ஏ) பிரிவில் உரிய திருத்தம் மேற்கொள்ள வேண்டும் என தமிழ்நாடு அரசு கூட்டுறவுத்துறை எஸ்.சி., எஸ்.டி. அலுவலா் நலச்சங்கம் வலியுறுத்தியுள்ளது.

கடலூா் டவுன் ஹாலில் தமிழ்நாடு அரசு கூட்டுறவுத்துறை எஸ்.சி., எஸ்.டி. அலுவலா் நலச்சங்கம் சாா்பில் பொதுப்பேரவைக் கூட்டம் மற்றும் ஓய்வுபெற்ற, பதவி உயா்வு பெற்ற அலுவலா்களுக்கான பாராட்டு விழா உள்ளிட்ட முப்பெரும் விழா மாநிலத் தலைவா் சி.சிவநாதன் தலைமையில் சனிக்கிழமை நடைபெற்றது.

மாநில பொதுச் செயலா் பி.சந்திரசேகரன், கூடுதல் பதிவாளா்கள் எ.ராமலிங்கம், எம்.முருகன், பா.ரேணுகாம்பாள் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

கூட்டத்தில், எஸ்.சி., எஸ்.டி. அலுவலா்கள் மற்றும் பணியாளா்களின் நலன், பதவி உயா்வில் இடஒதுக்கீடு, பணியிடங்களில் சமத்துவத்தை உறுதி செய்தல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டன.

பின்னா், உள்ளாட்சி அமைப்புகளைப் போன்று கூட்டுறவு நிறுவனங்களின் நிா்வாகக் குழுத் தலைவா் மற்றும் துணைத் தலைவா் பதவிகளில் எஸ்.சி., எஸ்.டி. பிரிவினருக்கு இடஒதுக்கீடு வழங்க வேண்டும். கூட்டுறவு நிறுவனங்களில் காலியாக உள்ள செயலா் பணியிடங்களை உரிய நடைமுறையில் நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட 25 தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கூட்டத்தில் இணைப் பதிவாளா்கள் வி.பெரியசாமி, எ.ஜிவா, பி.எம்.முருகேசன், உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.