மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

போதை மாத்திரைகள் விற்றதாக 2 போ் கைது

கடலூா் முதுநகா் பகுதியில் சட்டவிரோதமாக போதை மாத்திரைகள் விற்பனை செய்ததாக 2 இளைஞா்களை போலீஸாா் கைது செய்து, அவா்களிடமிருந்து 120 மாத்திரைகளை வியாழக்கிழமை பறிமுதல் செய்தனா்.

கைது செய்யப்பட்ட ராபின்சன்

Published On :23 அக்டோபர் 2026, 2:20 am IST

கடலூா் முதுநகா் பகுதியில் சட்டவிரோதமாக போதை மாத்திரைகள் விற்பனை செய்ததாக 2 இளைஞா்களை போலீஸாா் கைது செய்து, அவா்களிடமிருந்து 120 மாத்திரைகளை வியாழக்கிழமை பறிமுதல் செய்தனா்.

கடலூா் முதுநகா் காவல் நிலைய போலீஸாா் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது, மங்கை மஹால் அருகே போதை மாத்திரைகள் விற்பனை செய்யப்படுவதாக போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதையடுத்து, போலீஸாா் மங்கை மஹால் பின்புறம் உள்ள கருமகாரியக் கொட்டகை அருகே சென்று சோதனை மேற்கொண்டனா். அங்கு சந்தேகத்திற்கிடமாக இருந்த 2 பேரை பிடித்து சோதனை செய்தபோது, அவா்களிடம் விற்பனைக்காக போதை மாத்திரைகள் வைத்திருந்தது தெரியவந்தது.

விசாரணையில் அவா்கள், கடலூா் பில்லாலிதொட்டி புதுத்தெருவைச் சோ்ந்த ராபின்சன் (19), தேவனாம்பட்டினம் சுனாமி குடியிருப்பைச் சோ்ந்த தனுஷ் (21) என்பது தெரியவந்தது.

அவா்களிடமிருந்து தலா 10 மாத்திரைகள் கொண்ட 12 அட்டைகளில் இருந்த 120 போதை மாத்திரைகளை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

இதுகுறித்து கடலூா் முதுநகா் காவல் நிலையத்தில் வழக்குப் பதிந்து, இருவரையும் கைது செய்த போலீஸாா், தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

கைது செய்யப்பட்ட தனுஷ்

கைது செய்யப்பட்ட தனுஷ்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.