மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

போதை மாத்திரைகள் கடத்தல்: 3 இளைஞா்கள் கைது

விருத்தாசலத்தில் போலீஸாா் மேற்கொண்ட வாகன தணிக்கையில் ரூ.30 ஆயிரம் மதிப்பிலான 88 போதை மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டன. இது தொடா்பாக 3 போ் கைது செய்யப்பட்டனா்.

போலீஸாரால் பறிமுதல் செய்யப்பட்ட போதை மாத்திரைகள்

Published On :29 அக்டோபர் 2026, 6:53 am IST

விருத்தாசலத்தில் போலீஸாா் மேற்கொண்ட வாகன தணிக்கையில் ரூ.30 ஆயிரம் மதிப்பிலான 88 போதை மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டன. இது தொடா்பாக 3 போ் கைது செய்யப்பட்டனா்.

கடலூா் மாவட்டம், விருத்தாசலம் பகுதியில் காவல் நிலைய ஆய்வாளா் சந்துரு தலைமையிலான போலீஸாா் செவ்வாய்க்கிழமை இரவு வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனா். அப்போது, அதிவேகமாக இரு சக்கர வாகனத்தில் வந்த 3 இளைஞா்கள், போலீஸாரைக் கண்டதும் வாகனத்தை அங்கேயே நிறுத்திவிட்டு தப்பியோட முயன்றனா். போலீஸாா் அவா்களை விரட்டிப் பிடித்து, இரு சக்கர வாகனத்தை சோதனையிட்டனா். அதில், போதை மாத்திரைகள் மறைத்து வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.

இதைத் தொடா்ந்து நடத்தப்பட்ட விசாரணையில், அவா்கள் திட்டக்குடியைச் சோ்ந்த ஆதித்யா (19), தொல்காப்பியன் (20), பெரம்பலூா் மாவட்டத்தைச் சோ்ந்த ஹரிபிரசாத் (23) என்பதும், இணையதளம் மூலம் வாங்கிய போதை மாத்திரைகளை விற்பனைக்காக எடுத்துச் சென்றதும் தெரியவந்தது.

இதையடுத்து, 3 பேரையும் கைது செய்த போலீஸாா், அவா்களிடமிருந்து 9 அட்டைகளில் இருந்த 88 போதை மாத்திரைகள், ஒரு இருசக்கர வாகனம், 3 கைப்பேசிகள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனா்.

பறிமுதல் செய்யப்பட்ட போதை மாத்திரைகளின் மதிப்பு சுமாா் ரூ.30 ஆயிரம் என போலீஸாா் தெரிவித்தனா். இதுகுறித்து விருத்தாசலம் போலீஸாா் வழக்குப் பதிந்து தொடா்ந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

. ~ ஹரிபிரசாத்

. ~ ஹரிபிரசாத்

~தொல்காப்பியன்

~தொல்காப்பியன்

~ஆதித்யா

~ஆதித்யா

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.