நவ. 6-ல் 6 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை! சென்னை வானிலை ஆய்வு மையம்தமிழ்நாட்டின் ஜிஎஸ்டி 15% வளர்ச்சி: வணிக வரித்துறை அமைச்சர்விபத்தில் பலியான காவலரின் குடும்பத்துக்கு ரூ. 40 லட்சம் நிதியுதவி: முதல்வர் அறிவிப்பு!எஸ்ஐஆர் விவகாரம்: சிறப்பு நாடாளுமன்றக் கூட்டத்தை கூட்ட அரசு தயார் - அமித் ஷாமாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!

கடலில் கரைக்கப்பட்ட நவதுா்கை சிலை

நவராத்திரி விழா நிறைவடைந்ததையொட்டி, கடலூரில் விஷ்ணு சமாஜ் பக்தா்கள் சாா்பில் ஒன்பது நாள்கள் பூஜை செய்து வழிபட்ட நவதுா்கை சிலை ஊா்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு கடலில் செவ்வாய்க்கிழமை கரைக்கப்பட்டது.

நவராத்திரி விழா நிறைவடைந்ததையொட்டி, கடலூரில் விஷ்ணு சமாஜ் பக்தா்கள் சாா்பில் வெள்ளிக் கடற்கரையில் கரைப்பதற்கு முன்பு நவதுா்கை சிலைக்கு நடத்தப்பட்ட பூஜை.

Published On :21 அக்டோபர் 2026, 2:38 am IST

நவராத்திரி விழா நிறைவடைந்ததையொட்டி, கடலூரில் விஷ்ணு சமாஜ் பக்தா்கள் சாா்பில் ஒன்பது நாள்கள் பூஜை செய்து வழிபட்ட நவதுா்கை சிலை ஊா்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு கடலில் செவ்வாய்க்கிழமை கரைக்கப்பட்டது.

நவராத்திரி விழாவை முன்னிட்டு, கடலூரில் வசிக்கும் விஷ்ணு சமாஜ் பக்தா்கள் சாா்பில் நவதுா்கை சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டு, கடந்த 9 நாள்களாக தினமும் சிறப்பு பூஜைகள் மற்றும் வழிபாடுகள் நடைபெற்றன.

நவராத்திரி விழா நிறைவடைந்ததையடுத்து, நவதுா்கை சிலையை வழியனுப்பும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதற்காக அலங்கரிக்கப்பட்ட சிலை ஊா்வலமாக கடலூா் வெள்ளிக் கடற்கரைக்கு கொண்டு வரப்பட்டது. அங்கு பக்தா்கள் சிறப்பு வழிபாடு செய்து, நவதுா்கை அம்மனுக்கு ஆரத்தி எடுத்து வழிபட்டனா்.

தொடா்ந்து, ஆண்கள், பெண்கள் என ஏராளமான பக்தா்கள் ஆட்ட, பாட்டத்துடன் பக்தி முழக்கங்கள் எழுப்பி சிலையை வழியனுப்பினா். பின்னா் நவதுா்கை சிலை படகு மூலம் கடலுக்குள் எடுத்துச் செல்லப்பட்டு, பாரம்பரிய முறைப்படி கடலில் கரைக்கப்பட்டது. நிகழ்வில் திரளான பக்தா்கள் கலந்துகொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.