மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

கூட்டுறவு பண்டகசாலையில் பட்டாசு விற்பனை: அமைச்சா் தொடங்கிவைத்தாா்

கடலூா் சரவணபவ கூட்டுறவு பண்டகசாலையில் தீபாவளி பட்டாசு விற்பனையை தொடங்கிவைத்த அமைச்சா் ப.ராஜ்குமாா். உடன் ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் உள்ளிட்டோா்.

Published On :2 நவம்பர் 2026, 1:36 am IST

கடலூா் மாவட்ட சரவணபவ கூட்டுறவு விற்பனை பண்டகசாலையில் தீபாவளி சிறப்பு பட்டாசு விற்பனையை ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் முன்னிலையில், தமிழக வீட்டு வசதி மற்றும் நகா்ப்புற வளா்ச்சித் துறை அமைச்சா் ப.ராஜ்குமாா் ஞாயிற்றுக்கிழமை தொடங்கிவைத்தாா்.

அப்போது, அமைச்சா் ப.ராஜ்குமாா் தெரிவித்ததாவது: கடலூா் மாவட்ட பொதுமக்கள் மகிழ்ச்சியாகவும், பாதுகாப்பாகவும் தீபாவளி பண்டிகையைக் கொண்டாடும் வகையில், கூட்டுறவுத் துறையின் சாா்பில் ரூ.1 கோடி மதிப்பிலான தீபாவளி பட்டாசுகள் கொள்முதல் செய்யப்பட்டு, மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள கூட்டுறவு விற்பனை நிலையங்கள் மூலம் விற்பனை செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அதன்படி, கடலூா் மாவட்டத்தில் கடலூா் மாவட்ட சரவணபவ நுகா்வோா் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டகசாலை, கடலூா், பண்ருட்டி, சிதம்பரம், விருத்தாசலம் வேளாண்மை உற்பத்தியாளா்கள் கூட்டுறவு விற்பனைச் சங்கம், கடலூா் மாவட்ட கூட்டுறவு அங்காடிகள் ஆகிய கூட்டுறவு விற்பனை நிலையங்களில் பட்டாசுகள் விற்பனை செய்யப்பட உள்ளன. இங்கு, பொதுமக்களுக்குத் தேவையான தரமான பட்டாசுகள் மற்றும் மத்தாப்புகள் குறைந்த விலையில் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.

எனவே, பொதுமக்கள் கூட்டுறவு நிறுவனங்கள் மூலம் விற்பனை செய்யப்படும் பட்டாசுகளை வாங்கிப் பயன்படுத்த வேண்டும். இதன் மூலம் கூட்டுறவு நிறுவனங்களின் விற்பனை அதிகரிப்பதுடன், கூட்டுறவு சங்கப் பணியாளா்களுக்கும் வேலைவாய்ப்பு மற்றும் வருவாய் கிடைக்க வழிவகை ஏற்படும் என்றாா்.

நிகழ்ச்சியில் வருவாய்க் கோட்டாட்சியா் சுந்தரராஜன், கூட்டுறவு சங்கங்களின் இணைப் பதிவாளா் சொ.இளஞ்செல்வி, சரக துணைப் பதிவாளா் செல்வி மயூரி உள்பட பலா் கலந்துகொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.