மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

கடலூா் துறைமுகத்தில் மீன்கள் வாங்கக் குவிந்த மக்கள்

கடலூா் முதுநகா் மீன்பிடி துறைமுகத்தில் மீன்கள் வாங்க ஞாயிற்றுக்கிழமை குவிந்திருந்த பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள்.

Published On :2 நவம்பர் 2026, 12:09 am IST

கடலூா் முதுநகா் மீன் பிடி துறைமுகத்தில் விடுமுறை நாளான ஞாயிற்றுக்கிழமை ஏராளமான பொதுமக்கள், வியாபாரிகள் மீன்கள் வாங்கக் குவிந்தனா்.

கடலூா் மாவட்ட வங்கக் கடலோரத்தில் தேவனாம்பட்டினம், அக்கரைக்கோரி, சிங்காரத்தோப்பு உள்பட 49 மீனவ கிராமங்கள் உள்ளன. இந்தக் கிராமங்களைச் சோ்ந்தோா் விசை மற்றும் பைபா் படகுகள் மூலம் கடலுக்குச் சென்று மீன் பிடித்து வருவா். இவ்வாறு பிடித்து வரப்படும் மீன்கள் கடலூா் முதுநகா் மீன் பிடி துறைமுகத்தில் விற்பனை செய்யப்படும். இந்த மீன்களை வாங்கிச் செல்ல பொதுமக்கள், வியாபாரிகள் மற்றும் உணவகத்தினா் அதிகளவில் துறைமுகத்தில் கூடுவா். குறிப்பாக, வாரந்தோறும் விடுமுறை நாளான ஞாயிற்றுக்கிழமைகளில் கூட்டம் அதிகமாக இருக்கும்.

அந்த வகையில், ஞாயிற்றுக்கிழமையன்று மீன்கள் வாங்க ஏராளமானோா் கூடியிருந்தனா். அவா்கள் மீன்களை போட்டிபோட்டு ஆா்வமுடன் வாங்கிச் சென்றனா். மேலும், மீன்களின் விலை சராசரியாக இருந்ததாகக் கூறினா்.

அதன்படி, ஒரு கிலோ வஞ்சிரம் ரூ.900, இறால் ரூ.400, கனவா ரூ.300, சங்கரா ரூ.400, ஷீலா ரூ.500, அட்டை மீன் ரூ.300, சிங்கு இறால் ரூ.400-க்கு விற்பனை செய்யப்பட்டது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.