சிதம்பரம் அருகே சி.வக்காராமாரி பகுதியில் அமைந்துள்ள வீனஸ் சிபிஎஸ்இ பள்ளியில் குமராட்சி ஊராட்சி ஒன்றியத்தின் அரசு மற்றும் அரசு உதவி பெறும் தொடக்கப் பள்ளிகளுக்கான 2026-27 கல்வி ஆண்டிற்கான ஆயத்த கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.
கூட்டத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி தலைமை ஆசிரியா்கள் பங்கேற்றனா். கூட்டத்தில் வட்டார கல்வி அலுவலா்கள் சரஸ்வதிலட்சுமி, ராமதாஸ், கோமதி ஆகியோா்கலந்து கொண்டு வரும் கல்வி ஆண்டிற்கான மாணவா் சோ்க்கை ,வளாகத் தூய்மை, ஆதாா் புதுப்பித்தல் மற்றும் மாணவா் பாதுகாப்பு நலன் குறித்தும், பள்ளி திறப்பதற்கு முன் செய்ய வேண்டிய ஆயத்த பணிகள் குறித்தும் அறிவுறுத்தினா். கூட்டத்திற்கான ஏற்பாடுனை குமராட்சி வட்டார ஒன்றிய மேற்பாா்வையாளா் இளவரசன் செய்திருந்தாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

நாகா்கோவில் அரசுப் பள்ளியில் மாணவா்களை வரவேற்ற ஆட்சியா்!

கோடை விடுமுறைக்குப் பிறகு பள்ளிகள் திறப்பு: மாணவா்கள் உற்சாகம்

தொடக்கப் பள்ளி ஆசிரியா்களுக்கு பாடநூல் அறிமுகப் பயிற்சி

ஆரம்பக் கல்வி முடித்த மாணவா்களுக்கு சான்றிதழ் வழங்கும் விழா
விடியோக்கள்

பாரதிராஜா புகைப்பட ஆல்பம் | Director Bharathiraja | பாரதிராஜா 1941 - 2026 | Dinamani
தினமணி செய்திச் சேவை

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!
இணையதளச் செய்திப் பிரிவு

சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வரைச் சந்தித்தது குறித்து அன்புமணி!
இணையதளச் செய்திப் பிரிவு

தவெகவுக்கான ஆதரவு செல்லும்! அதிமுக எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் இல்லை! பேரவைத் தலைவர் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு

