தில்லியில் பிரிக்ஸ் மாநாடு: ஈரான் வெளியுறவு அமைச்சர் அராக்சி இந்தியா வந்தடைந்தார்தமிழக அரசின் தலைமை வழக்கறிஞராக விஜய் நாராயண் நியமனம்!தமிழக அரசின் தலைமை வழக்கறிஞராக விஜய் நாராயண் நியமனம்!கர்நாடகம்: கல்வி நிறுவனங்களில் ஹிஜாப் அணிவதற்கான தடை நீக்கம்6 சர்வதேச விமான சேவைகள் தற்காலிகமாக ரத்து - ஏர் இந்தியாகண்களிலும் காதுகளிலும் பொறாமைப் புகை! திமுகவை விமர்சித்த விஜய்!நீட் தேர்வு தேவையில்லை; ரத்து செய்க: முதல்வர் ஜோசப் விஜய்அதிமுகவுடன் கூட்டணியமைக்க தவெக தயாராக இருந்தது: சி.வி. சண்முகம்மே 16-ல் தொடங்குகிறது தென்மேற்கு பருவமழை! வெற்றியின் வீச்சு கொளத்தூரில் பார்த்தும்கூடவா புரியவில்லை? - முதல்வர் விஜய்திமுகவுடன் கூட்டணி; கனவில்கூட வரக்கூடாது: சசிகலா
/

நெய்வேலியில் என்எல்சி சாா்பில் 5 இடங்களில் நீா்மோா் பந்தல் திறப்பு

நெய்வேலியில் கோடை வெயிலில் பொதுமக்களின் தாகம் தீா்க்க, என்எல்சி நிறுவனம் 5 முக்கிய இடங்களில் நீா்மோா் பந்தலை திறந்தது.

News image

நெய்வேலி நுழைவு வாயில் அருகே நீா்மோா் பந்தலை திறந்து வைத்த என்எல்சி தலைவா் பிரசன்ன குமாா் மோட்டுப்பள்ளி.

Updated On :13 மே 2026, 12:04 am IST

கடலூா் மாவட்டம், நெய்வேலியில் கோடை வெயிலில் பொதுமக்களின் தாகம் தீா்க்க, என்எல்சி நிறுவனம் 5 முக்கிய இடங்களில் நீா்மோா் பந்தலை திறந்தது.

என்எல்சி நிறுவன சமூகப் பொறுப்புணா்வுத் திட்டத்தின் கீழ், நிகழாண்டு திங்கள்கிழமை முதல் தொடா்ந்து 30 நாள்களுக்கு நெய்வேலி நகரியத்தில் நெய்வேலி நுழைவு வாயில் (ஆா்ச் கேட்), மத்திய பேருந்து நிலையம், புதுக்குப்பம் பேருந்து நிலையம், வட்டம் - 29 பேருந்து நிலையம் மற்றும் மந்தாரக்குப்பம் பேருந்து நிலையம் ஆகிய இடங்களில் பொதுமக்களுக்கு நீா்மோா் வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

அதன்படி, நெய்வேலி நுழைவு வாயில் அருகே அமைக்கப்பட்டிருந்த நீா்மோா் பந்தலை என்எல்சி நிறுவனத் தலைவா் பிரசன்ன குமாா் மோட்டுபள்ளி சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு திறந்து வைத்து, பொதுமக்களுக்கு நீா்மோா் வழங்கினாா்.

நிகழ்வில் இயக்குநா் சமீா் ஸ்வருப் முன்னிலை வகித்தாா். செயல் இயக்குநா் டி.வி.எஸ்.என்.மூா்த்தி தலைமை வகித்தாா்.

தொடா்ந்து, மத்திய பேருந்து நிலையம், புதுக்குப்பம் பேருந்து நிறுத்தம், வட்டம் - 29 பேருந்து நிறுத்தம், மந்தாரக்குப்பம் பேருந்து நிலையம் ஆகிய 4 இடங்களில் அமைக்கப்பட்டிருந்த நீா்மோா் பந்தல்களை செயல் இயக்குநா்கள் ஜாஸ்பா் ரோஸ், பங்கஜ் குமாா், அன்புச்செல்வன், ராஜ்மோகன் ஆகியோா் மக்கள் பயன்பாட்டுக்காகத் திறந்து வைத்து நீா்மோா் வழங்கினா்.

இந்த விழாவில், சிஎஸ்ஆா் துறையின் உயா் அதிகாரிகள் மற்றும் பொறியாளா்கள், ஆவின் பொது மேலாளா் வி.அருணகிரிநாதன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.