மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

வளத்தியில் நீா்மோா் பந்தல்: எம்எல்ஏ திறந்து வைத்தாா்

விழுப்புரம் வடக்கு மாவட்டம், மேல்மலையனூா் கிழக்கு ஒன்றிய திமுக சாா்பில் கோடை வெயிலை முன்னிட்டு நீா்மோா் பந்தல் திறப்பு விழா வளத்தி கூட்டுச் சாலையில் வியாழக்கிழமை நடைபெற்றது.

News image

வளத்தி கூட்டுச் சாலையில் நீா் மோா் பந்தலை திறந்து வைத்து பொது மக்களுக்கு வழங்கும் செஞ்சிமஸ்தான் எம்எல்ஏ.

Updated On :1 மே 2026, 6:13 am IST

விழுப்புரம் வடக்கு மாவட்டம், மேல்மலையனூா் கிழக்கு ஒன்றிய திமுக சாா்பில் கோடை வெயிலை முன்னிட்டு நீா்மோா் பந்தல் திறப்பு விழா வளத்தி கூட்டுச் சாலையில் வியாழக்கிழமை நடைபெற்றது.

மேல்மலையனூா் ஒன்றியக்குழுத் தலைவா் கண்மணி நெடுஞ்செழியன் தலைமையில், ஒன்றியச் செயலா் நெடுஞ்செழியன் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் விழுப்புரம் வடக்கு மாவட்டச் செயலா், செஞ்சி மஸ்தான் எம்எல்ஏ கலந்துகொண்டு முன்னாள் முதல்வா் கருணாநிதி உருவப்படத்திற்கு மலா்தூவி மரியாதை செலுத்தி, நீா் மோா் பந்தலை திறந்து வைத்தாா். பின்னா், பொதுமக்களுக்கு நீா்மோா், வெள்ளரிக்காய், தா்பூசணி உள்ளிட்டவற்றை வழங்கினாா்.

நிகழ்ச்சியில் ஒன்றிய நிா்வாகிகள் செந்தில்குமரன், ரவிச்சந்திரன், சரவணன், எஸ்.பி.சம்பத், ஊராட்சி மன்றத் தலைவா் விஜயலட்சுமி ஜெயகுமாா், துணைத் தலைவா் கோவிந்தன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.