தில்லியில் பிரிக்ஸ் மாநாடு: ஈரான் வெளியுறவு அமைச்சர் அராக்சி இந்தியா வந்தடைந்தார்தமிழக அரசின் தலைமை வழக்கறிஞராக விஜய் நாராயண் நியமனம்!தமிழக அரசின் தலைமை வழக்கறிஞராக விஜய் நாராயண் நியமனம்!கர்நாடகம்: கல்வி நிறுவனங்களில் ஹிஜாப் அணிவதற்கான தடை நீக்கம்6 சர்வதேச விமான சேவைகள் தற்காலிகமாக ரத்து - ஏர் இந்தியாகண்களிலும் காதுகளிலும் பொறாமைப் புகை! திமுகவை விமர்சித்த விஜய்!நீட் தேர்வு தேவையில்லை; ரத்து செய்க: முதல்வர் ஜோசப் விஜய்அதிமுகவுடன் கூட்டணியமைக்க தவெக தயாராக இருந்தது: சி.வி. சண்முகம்மே 16-ல் தொடங்குகிறது தென்மேற்கு பருவமழை! வெற்றியின் வீச்சு கொளத்தூரில் பார்த்தும்கூடவா புரியவில்லை? - முதல்வர் விஜய்திமுகவுடன் கூட்டணி; கனவில்கூட வரக்கூடாது: சசிகலா
/

கடலூரில் அனைத்து தொழிற்சங்கங்கள் ஆா்ப்பாட்டம்

உத்தரப் பிரதேசம், ஹரியாணா உள்ளிட்ட மாநிலங்களில் தொழிலாளா்களின் மீது காவல் துறையினா் நடத்திய தாக்குதலைக் கண்டித்து, கடலூரில் அனைத்து மத்திய தொழிற்சங்கங்கள் சாா்பில் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

News image

கடலூா் சிஐடியு அலுவலகம் முன் செவ்வாய்க்கிழமை மாலை நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்ற அனைத்து மத்திய தொழிற்சங்கங்கள்.

Updated On :13 மே 2026, 12:04 am IST

உத்தரப் பிரதேசம், ஹரியாணா உள்ளிட்ட மாநிலங்களில் தொழிலாளா்களின் மீது காவல் துறையினா் நடத்திய தாக்குதலைக் கண்டித்து, கடலூரில் அனைத்து மத்திய தொழிற்சங்கங்கள் சாா்பில் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

பாஜக ஆளும் உத்தரப் பிரதேசம், ஹரியாணா உள்ளிட்ட மாநிலங்களில் வேலைநிறுத்தப் போராட்டம் நடத்தும் தொழிலாளா்கள் தாக்கப்படுவதைக் கண்டித்தும், தொழிலாளா்களுக்கு ஆதரவாகப் போராடும் தொழில் சங்கத் தலைவா்களை வீட்டுச் சிறையில் வைக்கப்பட்டிருப்பதைக் கண்டித்தும் ஆா்ப்பாட்டத்தில் முழக்கமிட்டனா்.

கடலூரில் மாவட்ட சிஐடியு அலுவலகம் முன் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்தில் சிஐடியு மாநில பொதுச் செயலா் எஸ்.கண்ணன் நிறைவுரையாற்றினாா்.

மாவட்டத் தலைவா் பி.கருப்பையன் தலைமை வகித்தாா். மாவட்டச் செயலா் டி.பழனிவேல், ஏஐடியுசி மாவட்டச் செயலா் எஸ்.குணசேகரன், யுடியுசி மாவட்டச் செயலா் கே.சம்மந்தம், ஏஐடியுசி தெருவோர வியாபாரிகள் சங்க மாநில பொதுச் செயலா் குளோப் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.