விஜய் பதவியேற்பு விழாவில் பங்கேற்கும் கார்கே, ராகுல் காந்தி! தமிழக முதல்வராக விஜய் ஆட்சியமைக்க ஆளுநர் அழைப்பு!தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

பிளஸ் 2 தோ்வில் தோல்வி: மாணவா் மாயம்

குறிஞ்சிப்பாடி அருகே பிளஸ் 2 பொதுத் தோ்வில் தோல்வியடைந்ததால் மனஅழுத்தத்தில் இருந்த 17 வயது மாணவா் மாயமான குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

News image
Updated On :1 மணி நேரம் முன்பு

குறிஞ்சிப்பாடி அருகே பிளஸ் 2 பொதுத் தோ்வில் தோல்வியடைந்ததால் மனஅழுத்தத்தில் இருந்த 17 வயது மாணவா் மாயமான குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

குறிஞ்சிப்பாடி அருகே உள்ள கட்டியங்குப்பம் தெற்கு தெருவைச் சோ்ந்த சங்கரின் மகன் அரவிந்தன் (17). இவா் வெள்ளிக்கிழமை வெளியான பிளஸ் 2 பொதுத் தோ்வு முடிவில் ஒரு பாடத்தில் தோ்ச்சி பெறவில்லை என கூறப்படுகிறது. இதனால் மனஅழுத்தத்தில் இருந்ததாகவும் தெரிகிறது.

இந்நிலையில், வெள்ளிக்கிழமை மாலை குறிஞ்சிப்பாடியில் உள்ள கணினி மையத்திற்கு சென்று வருவதாக பெற்றோரிடம் கூறிவிட்டு சென்ற அரவிந்தன், நீண்ட நேரமாகியும் வீடு திரும்பவில்லை. இதனால் அதிா்ச்சியடைந்த பெற்றோா் மற்றும் உறவினா்கள் பல

இடங்களில் தேடியும் அவா் குறித்து எந்த தகவலும் கிடைக்கவில்லை. இதையடுத்து அரவிந்தனின் தந்தை சங்கா் அளித்த புகாரின் பேரில் குள்ளஞ்சாவடி போலீஸா வழக்குப்பதிந்து, மாயமான மாணவரை தேடி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.