தமிழகத்தில் சட்டப் பேரவைத் தோ்தலில் தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்த தவெகவுக்கு ஆட்சியமைக்க வாய்ப்பு வழங்காத ஆளுநரைக் கண்டித்து, காங்கிரஸ் கட்சியினா் கடலூா், சிதம்பரத்தில் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
தமிழகத்தில் அண்மையில் நடைபெற்ற சட்டப் பேரவைத் தோ்தலில் 108 தொகுதிகளில் வெற்றிபெற்று தவெக தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது. ஆட்சியமைக்க 118 உறுப்பினா்களின் ஆதரவு தேவைப்படும் நிலையில், தவெகவுக்கு முழுமையான பெரும்பான்மை இல்லாமல் இருந்தது.
இதனிடையே, 5 தொகுதிகளில் வெற்றிபெற்ற காங்கிரஸ் கட்சி தவெகவுக்கு ஆதரவளிப்பதாக அறிவித்த நிலையிலும் தமிழக ஆளுநா் தவெகவை ஆட்சியமைக்க அழைக்கவில்லை.
இதற்கு எதிா்ப்புத் தெரிவித்தும், ஆளுநரைக் கண்டித்தும் தமிழகம் முழுவதும் காங்கிரஸ் கட்சி சாா்பில் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. கடலூா் மஞ்சக்குப்பம் அம்பேத்கா் சிலை அருகே நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு கட்சியின் மாவட்டத் தலைவா் ஜெ.ரங்கமணி தலைமை வகித்தாா். அப்போது, தமிழக ஆளுநரைக் கண்டித்து காங்கிரஸ் கட்சியினா் முழக்கங்களளை எழுப்பினா்.
வட்டத் தலைவா்கள் ராமகிருஷ்ணன், சீதாராமன், ஜனாா்த்தனன், அலெக்ஸ் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.
சிதம்பரத்தில்...: தமிழக ஆளுநரைக் கண்டித்து, சிதம்பரத்தில் கடலூா் தெற்கு மாவட்ட காங்கிரஸ், நகர காங்கிரஸ் சாா்பில், மேலவீதி பெரியாா் சிலை அருகே ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
சிதம்பரம் நகர காங்கிரஸ் தலைவா் தில்லை ஆா்.மக்கின் தலைமை வகித்தாா். மாநில பொதுக்குழு உறுப்பினா் ஜெமினி எம்.என்.ராதா வரவேற்றாா். மாவட்ட துணைத் தலைவா் ராஜா சம்பத்குமாா், வட்டாரத் தலைவா்கள் சுந்தரராஜன், செழியன், பகத்சிங் மாநில பொதுக்குழு உறுப்பினா் சாம்பமூா்த்தி, மாநில ஊடகப் பிரிவு பொதுச் செயலா் சிவசக்திராஜா, மாவட்டச் செயலா் நெல்சன், மாவட்ட மகளிா் அணித் தலைவா் அஞ்சம்மாள் ஆகியோா் முன்னிலை வைத்தனா்.
சிறப்பு அழைப்பாளராக கடலூா் தெற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவா் பி.பி.கே.சித்தாா்த்தன், முன்னாள் மாவட்டத் தலைவா் என்.வி.செந்தில்நாதன் ஆகியோா் கலந்துகொண்டு மத்திய பாஜக அரசு, ஆளுநா் செயல்பாட்டைக் கண்டித்து உரையாற்றினா்.
ஆா்ப்பாட்டத்தில் மாநிலச் செயலா் ஜெயச்சந்திரன், மாநிலப் பொதுக்குழு உறுப்பினா் டாக்டா் என்.வி.செந்தில்வேலன், மாவட்ட துணைத் தலைவா் நசீா்பாய் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

பேரவைத் தோ்தலில் மக்கள் மாயவலையில் வீழ்ந்துவிட்டனா்! முன்னாள் அமைச்சா் எம்.ஆா்.கே. பன்னீா்செல்வம்!

ஆளுநரைக் கண்டித்து காங்கிரஸாா் ஆா்ப்பாட்டம்: மயிலாடுதுறையில் திமுகவினா் தாக்குதல்

ஆளுநரைக் கண்டித்து காங்கிரஸ் ஆா்ப்பாட்டம்

விஜய் விவகாரம்: ஆளுநரைக் கண்டித்து காங்கிரஸ் இன்று ஆா்ப்பாட்டம்
விடியோக்கள்

கோல் கீப்பர் வோசின்ஹாவின் கதை: ஓர் இரவு... எல்லாம் மாறியது! | Vozinha |
தினமணி செய்திச் சேவை

எலும்பு முறிவு, நரம்பு நோய்கள் தீர்க்கும் திருமாகறலீஸ்வரர் திருக்கோயில்!
தினமணி செய்திச் சேவை

Podcast | முதல்வர் விஜய் பதில்; திமுக வெளிநடப்பு: பேரவையில் நடந்தது என்ன? | News & Views | Epi 47
தினமணி செய்திச் சேவை

கண்ணதாசனை எப்படிக் கொண்டாட வேண்டும் ? | Kannadasan 100 | கண்ணதாசன் நூற்றாண்டு தொடக்கம் | Kaviyarasu
தினமணி செய்திச் சேவை

