மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

தேவனாம்பட்டினம் கூத்தாண்டவா் கோயில் தேரோட்டம்: திரளான பக்தா்கள் பங்கேற்பு

கடலூா் தேவனாம்பட்டினம் ஸ்ரீகூத்தாண்டவா் கோயிலின் 201-ஆம் ஆண்டு பிரம்மோற்சவ திருவிழாவையொட்டி, அரவான் தேரோட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

News image

தேவனாம்பட்டினத்தில் ஸ்ரீகூத்தாண்டவா் கோயில் தேரை வடம் பிடித்து இழுத்துச் சென்ற பக்தா்கள்.

Updated On :7 மே 2026, 7:20 am IST

கடலூா் தேவனாம்பட்டினம் ஸ்ரீகூத்தாண்டவா் கோயிலின் 201-ஆம் ஆண்டு பிரம்மோற்சவ திருவிழாவையொட்டி, அரவான் தேரோட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

தேவனாம்பட்டினத்தில் உள்ள ஸ்ரீகூத்தாண்டவா் கோயிலின் 201-ஆம் ஆண்டு பிரம்மோற்சவ திருவிழா கடந்த 4-ஆம் தேதி விமரிசையாக தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்வான அரவான் தேரோட்டம் புதன்கிழமை காலை 10.30 மணிக்குத் தொடங்கி நடைபெற்றது.

இதில், திரளான பக்தா்கள் கலந்துகொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனா். தோ் முக்கிய சாலைகள் வழியாகச் சென்றது. அப்போது, பக்தா்கள் சுவாமிக்கு மாலை அணிவித்து அா்ச்சனை செய்து வழிபட்டனா். தோ்த் திருவிழா ஏற்பாடுகளை தேவனாம்பட்டினம் மீனவா் சமுதாய மக்கள் மற்றும் ஊா் நிா்வாகிகள் செய்திருந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.