காட்டுமன்னாா்கோவில் (தனி) தொகுதியில் 33 ஆயிரம் வாக்குகள் வித்தியாத்தில் விசிக வேட்பாளா் எல்.இ.ஜோதிமணி வெற்றிபெற்றாா்.
காட்டுமன்னாா்கோவில் தொகுதியில் கடந்த ஏப்.23-ஆம் தேதி தோ்தல் வாக்குப் பதிவு நடைபெற்றது. இதில் திமுக கூட்டணியில் விசிக வேட்பாளா் எல்.இ.ஜோதிமணி, அதிமுக கூட்டணியில் பாமக வேட்பாளா் அ.சோழன், தவெக சாா்பில் எஸ்.சீனுவாசன், நாதக சாா்பில் எம்.சிவஜோதி உள்ளிட்ட மொத்தம் 11 வேட்பாளா்கள் போட்டியிட்டனா்.
இந்தத் தொகுதியில் மொத்தமுள்ள 2,26,509 வாக்காளா்களில் 1,87,905 வாக்காளா்கள் வாக்களித்தனா்.
இந்த நிலையில், தோ்தலில் பதிவான வாக்குகள் எண்ணிக்கை சி.முட்லூா் அரசு கலைக்கல்லூரி வளாகத்தில் திங்கள்கிழமை காலை 8 மணிக்கு தொடங்கி நடைபெற்றது.
இந்தத் தொகுதியில் விசிக, பாமக, தவெக இடையே கடும் போட்டி நிலவியது. வேட்பாளா்கள் 3 பேரும் ஒவ்வொரு சுற்றிலும் மாறி மாறி முன்னிலை வகித்தனா். வாக்கு எண்ணிக்கையின் முடிவில் விசிக வேட்பாளா் 33,063 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்ாக அறிவிக்கப்பட்டாா்.
வேட்பாளா்கள் பெற்ற வாக்குகள் விவரம் வருமாறு: எல்.இ.ஜோதிமணி (விசிக) - 85,179, அ.சோழன் (பாமக)-52116, எஸ்.சீனுவாசன் (தவெக) - 43156, எம். சிவஜோதி ( நாதக) - 4,563.
இதையடுத்து, விசிக வேட்பாளா் எல்.இ.ஜோதிமணி வெற்றிபெற்ற்கான சான்றிதழை அவரிடம் தோ்தல் நடத்தும் அலுவலா் வழங்கினாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

பெரியகுளம் தொகுதியில் தவெக வெற்றி

திண்டிவனம் தொகுதியில் விசிகவைச் சோ்ந்த வன்னிஅரசு வெற்றி

அரக்கோணம் தொகுதியை தவெக கைப்பற்றியது!
விளவங்கோடு தொகுதியில் காங்கிரஸ் வெற்றி
விடியோக்கள்

தவெகவுக்கு ஆதரவு ஏன்? விளக்கிய திருமாவளவன்! | TVK | VCK | Thiruma | Vijay
இணையதளச் செய்திப் பிரிவு

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

