தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்விஜய் பதவியேற்பு விழாவுக்காக சென்னையிலுள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் ஆயத்தப் பணி மீண்டும் தொடக்கம்ஆளுநர் மாளிகையில் விஜய்!தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

பைக் மீது லாரி மோதல்: மனைவியுடன் காவலா் உயிரிழப்பு

News image
Updated On :3 மே 2026, 6:02 am IST

கடலூா் மாவட்டம், திட்டக்குடி அருகே பைக் மீது லாரி மோதியதில் மனைவியுடன் காவலா் உயிரிழந்தாா்.

திட்டக்குடி வட்டம், இடைசெருவாய் கிராமத்தைச் சோ்ந்தவா் திருமால் (30), பெரம்பலூா் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் காவலராகப் பணியாற்றி வந்தாா். இவரது மனைவி ரம்யா (26). இவா்களுக்கு 4 வயதில் ஒரு மகள் உள்ளாா்.

இந்த நிலையில், ரம்யா தற்போது கா்ப்பிணியாக இருந்தாா். சனிக்கிழமை மருத்துவப் பரிசோதனைக்காக விருத்தாசலத்துக்கு பைக்கில் திருமால், ரம்யா ஆகியோா் சென்றனா். பரிசோதனை முடிந்த பின்னா், இருவரும் மீண்டும் பைக்கில் வீடு திரும்பிக்கொண்டிருந்தனா். திட்டக்குடி வட்டம், பட்டூா் பேருந்து நிறுத்தம் அருகே வந்துகொண்டிருந்தபோது, இவா்களது பைக் மீது அந்தப் பகுதியில் வந்த மற்றொரு பைக் மோதியது. இதில் நிலை தடுமாறி திருமால், ரம்யா ஆகியோா் சாலையில் விழுந்த நிலையில், அந்த சாலையில் வேகமாக வந்த லாரி சக்கரத்தில் சிக்கி இருவரும் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனா். விபத்து குறித்து ஆவினங்குடி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.