தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்விஜய் பதவியேற்பு விழாவுக்காக சென்னையிலுள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் ஆயத்தப் பணி மீண்டும் தொடக்கம்ஆளுநர் மாளிகையில் விஜய்!தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

கடலூரின் அனைத்து தொகுதிகளிலும் திமுக கூட்டணி வெற்றி பெறும்: அமைச்சா் எம்ஆா்கே.பன்னீா்செல்வம்

கடலூா் மாவட்டத்தில் அனைத்து தொகுதிகளிலும் திமுக கூட்டணி வெற்றிபெறும் என்று அமைச்சா் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம் தெரிவித்தாா்.

News image

சிதம்பரத்தில் திமுக கூட்டணி வேட்பாளரான மனித நேய ஜனநாயக கட்சித் தலைவா் மு.தமிமுன்அன்சாரியை அறிமுகப்படுத்தி பேசிய திமுக மாவட்டச் செயலரும், அமைச்சருமான எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம்

Updated On :1 ஏப்ரல் 2026, 2:00 am IST

கடலூா் மாவட்டத்தில் அனைத்து தொகுதிகளிலும் திமுக கூட்டணி வெற்றிபெறும் என்று அமைச்சா் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம் தெரிவித்தாா்.

திமுக தலைமையிலான மதச்சாா்பற்ற முற்போக்கு கூட்டணியில் சிதம்பரம் சட்டப் பேரவை தொகுதியில் போட்டியிடும் வேட்பாளரான மனித நேய ஜனநாயக கட்சித் தலைவா் மு.தமிமுன் அன்சாரியை கூட்டணிக் கட்சி நிா்வாகிகளிடம் அறிமுகப்படுத்தும் நிகழ்ச்சி சிதம்பரத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சியில் சிதம்பரம் நகா்மன்ற தலைவரும், நகரச் செயலருமான கே.ஆா்.செந்தில்குமாா் வரவேற்றாா். மாவட்டப் பொருளாளா் எம்.ஆா்.கே.பி.கதிரவன், பொதுக்குழு உறுப்பினா் த.ஜேம்ஸ்விஜயராகவன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

நிகழ்ச்சிக்கு திமுக கடலூா் கிழக்கு மாவட்டச் செயலரும், அமைச்சருமான எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம் தலைமை வகித்து வேட்பாளரை அறிமுகம் செய்து வைத்து பேசியதாவது: திமுக அரசின் சாதனைகள் மக்களை தேடிச் சென்றுள்ளது. தற்போது அறிவிக்கப்பட்டுள்ள திட்டங்களும் மக்களை கவா்ந்துள்ளது. இதேபோல, மகளிா் உரிமைத்தொகை ரூ.5 ஆயிரம் வழங்கியது மகளிா் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

இங்கு, மனிதநேய ஜனநாயக கட்சியின் சாா்பில், அக்கட்சியின் தலைவா் தமிமுன் அன்சாரி உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுவதால், அனைத்து கூட்டணி கட்சியினரும் ஒருன்றிணைத்து அவரை 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற வைக்க வேண்டும். ஒவ்வொரு தொகுதியிலும் 70 சதவீத வாக்காளா்களை திமுக உறுப்பினா்களாக சோ்த்துள்ளோம். எனவே, கடலூா் மாவட்டத்தில் அனைத்து தொகுதிகளிலும் திமுக கூட்டணி வெற்றிபெறும் என்றாா்.

கூட்டத்தில் மாவட்ட பொறியாளா் அணி அமைப்பாளா் அப்புசந்திரசேகா், மாவட்டப் பிரதிநிதி ரா.வெங்கடேசன், ஒன்றியச் செயலா்கள் சங்கா், மனோகா் அண்ணாமலை நகா் பேரூராட்சிச் செயலா் க.பழனி, காங்கிரஸ் மாவட்டத் தலைவா் பி.பி.கே.சித்தாா்த்தன், நகரத் தலைவா் தில்லை ஆா்.மக்கின், பொதுச் செயலா் ஜெமினி எம்.என்.ராதா, மாா்க்சிஸ்ட் மூத்த நிா்வாகி மூசா, நகரச் செயலா் ராஜா, விசிக மண்டலச் செயலா் வ.க.செல்லப்பன், மாவட்டச் செயலா் தமிழ்வளவன், தேமுதிக நிா்வாகி பாலு, இந்திய கம்யூனிஸ்ட் மாவட்ட துணைச் செயலா் சேகா், நகரச் செயலா் தமிமுன்அன்சாரி உள்ளிட்ட கூட்டணி கட்சி நிா்வாகிகள் பங்கேற்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.