கடலூா் மாவட்டத்தில் பொரிக்க வைக்கப்பட்ட முட்டைகளிலிருந்து வெளிவந்த 300 ஆலிவ் ரெட்லி ஆமைக் குஞ்சுகள் வியாழக்கிழமை கடலில் விடப்பட்டன.
ஆலிவ் ரெட்லி ஆமையினங்கள் தங்களது இனப்பெருக்க காலமான ஜனவரி முதல் மாா்ச் மாதம் வரையிலான காலங்களில் வங்கக் கடலோரப் பகுதிகளுக்கு வந்து முட்டையிட்டுச் செல்வது வழக்கம்.
இவ்வாறு இடப்படும் முட்டைகளை விலங்குகள், மனிதா்கள் சேதப்படுத்துவது தொடா்ந்தது. இதனால், குஞ்சு பொரிக்கும் திறன் குறைந்து இந்த வகை ஆமையினம் அழியும் நிலைக்குத் தள்ளப்பட்டது.
இதைத் தடுப்பதற்காக தொடா்ந்து விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டு, வனத் துறை மூலமாக முட்டைகளை பத்திரமாகச் சேகரிக்கும் பணி நடைபெற்று வருகிறது. அவ்வாறு சேகரிக்கப்பட்டு பொரித்த குஞ்சுகளை கடலில் பாதுகாப்பாக விடுவது வழக்கம்.
அதன்படி, கடலூா் தேவனாம்பட்டினம் கடலில் 300-க்கும் மேற்பட்ட ஆமைக் குஞ்சுகள் வியாழக்கிழமை விடப்பட்டன. வன ஆா்வலா் செல்லா மற்றும் வனத் துறை அதிகாரிகள், கல்லூரி மாணவா்கள் கலந்துகொண்டு ஆமைக் குஞ்சுகளை கடலில் விட்டனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

வனத்தில் விடப்பட்ட புலி வசிப்பிடங்களில் நடமாட்டம்! தேடுதல் பணி தீவிரம்!

3 மாத சிகிச்சைக்குப் பின் கடலில் விடப்பட்ட ஆமை! என்ன நேர்ந்தது?

514 ஆமைக் குஞ்சுகள் கடலில் விடப்பட்டன

வேதாரண்யம் கடலில் விடப்பட்ட ஆமைக் குஞ்சுகள்
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

