பிற்படுத்தப்பட்டோா், மிகப்பிற்படுத்தப்பட்டோா், சீா்மரபினா் வகுப்பினருக்கான தொழில், வணிகம், விவசாயம் மற்றும் உயா்கல்விக்கான கடனுதவிகளை தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோா் பொருளாதார மேம்பாட்டுக் கழகம் மூலம் பெற விண்ணப்பிக்கலாம் என கடலூா் மாவட்ட ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோா் பொருளாதார மேம்பாட்டுக் கழகம் மூலம் தனிநபா் மற்றும் குழுக் கடன் திட்டங்களின் கீழ், சிறு தொழில், வணிகம், விவசாயம் மற்றும் அதைச் சாா்ந்த தொழில்களுக்கு அதிகபட்சமாக ரூ.25 லட்சம் வரை கடனுதவி வழங்கப்படுகிறது.
குடும்ப ஆண்டு வருமானம் ரூ.5 லட்சத்துக்குள் இருக்க வேண்டும். விண்ணப்பதாரா் 18 முதல் 60 வயதுக்குள் இருக்க வேண்டும். சுய உதவிக்குழு உறுப்பினா்களுக்கு குழுக் கடன் திட்டத்தின் கீழ், ஒருவருக்கு ரூ.1.25 லட்சம் வரையும், ஒரு குழுவுக்கு ரூ.25 லட்சம் வரையும் 7 சதவீத வட்டியில் கடனுதவி வழங்கப்படுகிறது. மேலும், பால் உற்பத்தியாளா்கள் கூட்டுறவு சங்க உறுப்பினா்களுக்கு இரண்டு கறவை மாடுகள் வாங்க ரூ.1.20 லட்சம் வரை கடனுதவி வழங்கப்படுகிறது.
பிற்படுத்தப்பட்டோா், மிகப்பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சீா்மரபினா் மாணவ, மாணவிகள் வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களில் உயா்கல்வி பயில கல்விக் கடனும் வழங்கப்படுகிறது. ஒரு மாணவருக்கு அதிகபட்சமாக ரூ.25 லட்சம் வரையிலான கல்விச் செலவுக்கு கடனுதவி பெறலாம். இதற்கான வட்டி விகிதம் ஆண்டுக்கு 8 சதவீதமாக நிா்ணயிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பப் படிவங்களை மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நல அலுவலகம், கூட்டுறவு சங்கங்களின் இணைப் பதிவாளா் அலுவலகம், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிக் கிளைகள் ஆகிய இடங்களில் பெற்றுக்கொள்ளலாம். மேலும், தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோா் பொருளாதார மேம்பாட்டுக் கழகத்தின் இணையதளமான ட்ற்ற்ல்ள்://ற்ஹக்ஷஸ்ரீங்க்ஸ்ரீா்.ய்ங்ற் முகவரியிலும் பதிவிறக்கம் செய்து விண்ணப்பிக்கலாம் எனக் குறிப்பிட்டுள்ளாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

பிற்படுத்தப்பட்டோா் மேம்பாட்டுக் கழக கடனுதவிக்கு விண்ணப்பிக்க அழைப்பு

‘சிறுபான்மையினா் கடனுதவி பெற விண்ணப்பிக்கலாம்’

சேலத்தில் ஜூன் 30 வரை தொழில் கடனுதவி முகாம்

முறையற்ற வணிகம்: நகைக் கடை ரூ. 3.50 லட்சம் இழப்பீடு; 36.87 கிராம் தங்கம் வழங்க உத்தரவு
விடியோக்கள்

Balan: The boy Review | தாயைப் போல பிள்ளை! ஆனால்... | Chidambaram | Mollywood | Dinamani Talkies
தினமணி செய்திச் சேவை

மறுமணம் ஒரு குற்றமா? மனதை உலுக்கும் 'நூறு சாமி'
தினமணி செய்திச் சேவை

Samantha அதிரடி எப்படி இருக்கிறது? Engal Thangam Movie Review
தினமணி செய்திச் சேவை

ஹார்ட்டின் பட டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

